சொந்த அப்பாவை விட அதிகம் நேசித்த ஹீரோவை நினைத்து கண்ணீர் விட்ட நடிகை ரோஜா!
தனது அப்பாவை விட சினிமாவில் தான் அதிகளவில் நேசித்த மிகப்பெரிய நடிகர் பற்றி ரோஜா மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் - ரோஜா
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, இந்து, வீரா, எங்கிருந்தோ வந்தான், அசுரன், ராசையா, தமிழ் செல்வன், வள்ளல், கடவுள், அரசியல், என் ஆசை ராசாவே என்று பல படங்களில் நடித்துள்ளார்.
லெனின் பாண்டியன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு லெனின் பாண்டியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இது தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகை ரோஜா
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகை ரோஜா அமைச்சரகாவும் இருந்தார். அரசியலுடன், 'ஜபர்தஸ்த்' காமெடி ஷோவில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடுவராக இருந்தார். அமைச்சர் ஆனதும் விலகிய அவர், தற்போது மீண்டும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துகிறார். ரோஜா தெலுங்கில் நடித்த 2வது படம் 'சர்ப்பயாகம்'. இதில் ஷோபன் பாபுவின் மகளாக நடித்தார். படப்பிடிப்பில், ஷோபன் பாபு ரோஜாவை தன் சொந்த மகளைப் போலவே பாசத்துடன் கவனித்துக் கொண்டார்.
ஷோபன் பாபுவின் மரணச் செய்தி
ஷோபன் பாபுவின் மரணச் செய்தி கேட்டு உடைந்து போனதாக ரோஜா கூறினார். 'அவரைப் போன்ற ஒரு பிணைப்பு வேறு யாருடனும் ஏற்படவில்லை. அவர் ஒரு சிறந்த மனிதர்' என்று கண்ணீருடன் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.