கோவையில், மட்டும் என்ன வித்தியாசம்? யாருக்காவது வித்தியாசம் தெரிகிறதா? நான் கண்டுபிடித்து விட்டேன். உள்ளே வரும்போது நீங்கள் என் காதில் சொல்லும் போதே நான் கண்டுபிடித்து விட்டேன். கொங்கு மண்டலத்தில் யாரு இன்னைக்கு பொறுப்பாளர்?

கோவையில் தேமுதிகவின் கூட்டத்திற்கு திமுகவினர் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தியுள்ளார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

இதுகுறித்து கோவையில் நடத்த விழாவில் பேசிய அவர், ‘‘இப்போ நான் இங்கே வந்து உட்கார்ந்ததில் இருந்து கழக நிர்வாகிகள் எல்லாம் என் காதில் சொல்றது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினாங்க என்கிறார்கள். நான் இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க போய் வந்து கொண்டு இருக்கிறேன். உங்களுக்கு தெரியும் தென்மாவட்டத்தை எல்லாம் முடிச்சு மதுரையில் இருந்து இன்னைக்கு கோவைக்கு வந்து இருக்கிறேன். அங்கெல்லாம் காவல்துறையும் சரி, பொதுமக்களும் சரி, தேமுதிகவுற்கு உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள். பக்க பலமாக இருக்கிறார்கள்.

இந்தக் கட்சி நல்ல கட்சி, நல்லா வரணும் என்று தான் சொல்கிறார்கள். ஆனால், கோவையில், மட்டும் என்ன வித்தியாசம்? யாருக்காவது வித்தியாசம் தெரிகிறதா? நான் கண்டுபிடித்து விட்டேன். உள்ளே வரும்போது நீங்கள் என் காதில் சொல்லும் போதே நான் கண்டுபிடித்து விட்டேன். கொங்கு மண்டலத்தில் யாரு இன்னைக்கு பொறுப்பாளர்? தமிழ்நாடு முழுக்க போய் வந்து விட்டேன். ஏன் கோவையில் மட்டும் இந்த அராஜாகம்? தேமுதிகவை பார்த்து உங்களுக்கு பயமா? நீங்க எங்கள் பேனரை எடுத்துவிட்டு, கொடியை எடுத்துவிட்டு தொல்லை கொடுக்கிறீர்கள்? அப்படி செய்தால் இந்த மீட்டிங் நடக்காதா? சீப்பை எடுத்து ஒழிக்க வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா?

அந்த அளவுக்கு பயப்படுகிற கூட்டம். இதெல்லாம் தேமுதிக 20 வருடங்களாக பார்த்து கடந்து வந்து விட்டது. 21வது வருஷத்தில் வந்து நிற்கிறது. அதனால், இதை யார் செய்தார்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் தெரியும், எங்களுடைய கழக நிர்வாகிகளுக்கும் தெரியும். அதனால் உங்கள் வேலையெல்லாம் தேமுதிகவிடம் வைத்துக் கொள்ளாதீர்கள்.

இன்னைக்கு வரைக்கும் உங்கள மாதிரி லஞ்சம், ஊழல் செய்து, கொள்ளையடித்து சுத்துகிற கட்சியில்லை தேமுதிக. சொந்த உழைப்பில், ரத்தத்தை வியர்வையாகச் சேர்ந்து இன்றைக்கு வரைக்கும் காட்சியை வளர்த்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டர்களை கொண்ட இயக்கம். இந்த இயக்கம் தலைவர் எவ்வழியோ அவ்வழி தான் தொண்டர்கள் என்று கொடுத்து கொடுத்து சிவந்த கரத்தின் சொந்தக்காரர் கேப்டன் அவர்கள் உருவாக்கிய கட்சி. கேப்டன் வழியில் இன்றைக்கு வரைக்கும், இந்த ஆலோசனைக் கூட்டம் வரைக்கும் சொந்த உழைப்பில் இந்த கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள் எங்கள் கழக நிர்வாகிகள். தொண்டர்களே தலைவணங்குகிறேன்’’ எனத் தெரிவித்தார்.