- Home
- Cinema
- AK64 படம் குறித்து ரசிகர்களுக்கு மாஸான அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்: எங்கு, எப்போது படப்பிடிப்பு?
AK64 படம் குறித்து ரசிகர்களுக்கு மாஸான அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்: எங்கு, எப்போது படப்பிடிப்பு?
அஜித் குமார் நடிப்பில் உருவாக இருக்கும் ஏகே64 படத்தின் படப்பிடிப்பு குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன், குட் பேட் அக்லீ, ஏகே64
ஒரே வருடத்தில் அடுத்தடுத்து 2 படங்களை ரிலீஸ் செய்த அஜித் குமார் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் படம் தான் ஏகே64. அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி ரசிகர்களிடையே மோசமான விமர்சன பெற்ற நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லீ படம் திரைக்கு வந்தது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது.
அஜித்குமார், அஜித், ஏகே64
இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித் கார் ரேஸில் பிஸியானார். இதனால் சினிமாவிற்கு கிட்டத்தட்ட 9 மாதங்கள் பிரேக்விட்டிருந்தார். இப்போது பைக் ரேஸ் முடிந்த நிலையில் ஏகே64 படம் குறித்து அப்டேட் வெளியாகி வருகிறது. அதன் படி இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். இதன் மூலமாக 2ஆவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார்.
ஏகே64 ஷூட்டிங்
ஏகே64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது: ஏகே64 படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும். அதற்கு முன்னதாக படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் குறித்து தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்புக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டதும் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஏகே64 அப்டேட்
கடந்த சில தினங்களுக்கு முன்பு இத்தாலி வெனிஸ் நகரில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் அஜித் குமாருக்கு ஜென்டில்மேன் டிரைவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அஜித் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.