இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:01 AM (IST) Jan 21
அய்யனார் துணை சீரியலில் சோழன் டைவர்ஸ் வேண்டும் என அடம்பிடித்து கேட்டதை நினைத்து நிலா அப்செட்டில் இருக்க, அவர் பைக்கில் செல்லும் போது விபத்திலும் சிக்கி இருக்கிறார்.
10:57 AM (IST) Jan 21
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து அமமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
10:49 AM (IST) Jan 21
நடிகை மடோனா செபாஸ்டியன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
10:38 AM (IST) Jan 21
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.
10:33 AM (IST) Jan 21
நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகும் 'கருப்பு' திரைப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:07 AM (IST) Jan 21
Chennai Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார மாற்றங்களால், இன்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.2800 உயர்ந்து ரூ.1,14,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
10:00 AM (IST) Jan 21
சார்லஸின் துடுக்குத் தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கும் எனவும் பகிரங்கமாக எச்சரித்தார்.
09:57 AM (IST) Jan 21
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் ஸ்கூலுக்கு சென்றுகொண்டிருந்த ரோகிணியை ஒரு கும்பல் வந்து கடத்திச் சென்று தர்ம அடி கொடுத்திருக்கிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:56 AM (IST) Jan 21
09:38 AM (IST) Jan 21
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
09:33 AM (IST) Jan 21
உலகப் புகழ்பெற்ற பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பக்தர்கள் மலைக்குச் செல்ல உதவும் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
09:30 AM (IST) Jan 21
காங்கிரசை சரிக்கட்டும் முடிவுக்கு திமுக தலைமை வந்திருக்கிறது. இதற்காக அசாம் மாநில தேர்தல் செலவை ஏற்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
09:00 AM (IST) Jan 21
ஜீப் இந்தியா தனது மெரிடியன் மற்றும் காம்பஸ் மாடல்களுக்காக “Jeep Confidence 7” என்ற புதிய பிரீமியம் ஓனர்ஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, பராமரிப்புத் தொகுப்பை வழங்குகிறது.
08:59 AM (IST) Jan 21
சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற இரண்டு ஐடி ஊழியர்களான நண்பர்கள், பீர் குடிக்கும் போட்டியில் ஈடுபட்டனர். அதிகப்படியாக பீர் குடித்ததால் இருவரும் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தனர்.
08:40 AM (IST) Jan 21
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள கதிர், ஜனனியை மிரட்டிவிட்டு வீட்டுக்கு சென்று தன்னுடைய ரெளடியிசத்தை ஆரம்பித்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:33 AM (IST) Jan 21
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஜனவரி 22 முதல் தனது சேவையைத் தொடங்குகிறது. இந்த அரை-உயர் வேக ரயில் 16 ஏசி பெட்டிகளுடன் வரும் இதன் ரயில் கட்டணங்கள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்.