- Home
- Spiritual
- சூரியனின் ரதத்தில் இத்தனை ரகசியங்களா? ரத சப்தமி அன்று வழிபடுவதால் கிடைக்கும் 10 பலன்கள்!
சூரியனின் ரதத்தில் இத்தனை ரகசியங்களா? ரத சப்தமி அன்று வழிபடுவதால் கிடைக்கும் 10 பலன்கள்!
Benefits of Ratha Saptami Worship and Secrets of Surya Chariot: சூரிய பகவானின் ரதம் வெறும் வாகனம் மட்டுமின்றி அது பிரபஞ்சத்தின் காலச் சக்கரத்தைக் குறிக்கிறது. சூரிய ரதத்தில் என்ன சிறப்புகள் இருக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Surya Jayanthi Ratha Saptami 2026
சூரிய பகவான் அவதரித்த நாளே ரத சப்தமி என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய ஜெயந்தி என்றும் சொல்லப்படுகிறது. காஷ்யப் முனிவருக்கும் அதிதி தேவிக்கும் மகனாக பிறந்தவர் தான் சூரிய பகவான். நவக்கிரகத்தில் தலைமை கிரகமாகவும் கருதப்படுகிறது. சூரிய பகவானின் வாகனம் தேர். அதாவது 7 குதிரைகள் பூட்டப்பட்ட தேர். சூரிய பகவானுக்கு கதிரவன், பகலவன், ரவி, பானு, ஆதித்தன் என்று வேறு சில பெயர்களும் உண்டு.
Ratha Saptami ரத சப்தமி:
ரத சப்தமி என்பது தை மாத வளர்பிறை சப்தமியில் கொண்டாடப்படும் சூரிய பகவான் அவதார நாள். சூரியன் வடக்கு நோக்கிப் பயணத்தைத் தொடங்கும் நாள். இந்த நாளில், சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி வடக்கு நோக்கிப் பயணம் செய்வதாகக் கருதப்படுகிறது; இது பாவங்களைப் போக்கி, ஆரோக்கியம், ஞானம் மற்றும் செல்வத்தை அளிக்கும் மிக முக்கியமான விரத நாள். புராணங்களின்படி, இது சூரியனின் பிறந்த நாள் சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. வசந்த காலத்தில் சூரிய பகவான் செல்வதால் நம் வாழ்வில் மற்றும் தொழிலில் வசந்தமாக திகழ்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.
சூரியன் ரதத்தின் சிறப்பு:
சூரிய பகவான் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணம் செய்வதாகவும், அந்த ரதத்தின் திசையை மாற்றும் நாள் என்றும் கருதப்படுகிறது. இந்தக் குதிரைகள் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் குறிக்கும் மற்றும் வாரத்தின் ஏழு நாட்களையும் குறிக்கின்றன. பொதுவாக அனைவர் வீட்டிலும் இந்த ஏழு குதிரையை உள்ள போட்டோக்கள் வீட்டின் வாசலில் மாட்டுவார்கள் ஏனென்றால் சூரிய பகவான் நம் வீட்டிற்கு நான் திசையில் பயணித்து வருவதாக கூறுவார்கள். இந்த ஏழு குதிரைகள் அடங்கிய போட்டோ வீட்டில் காணப்படும். செல்வ செழிப்புகளில் மேன்மைப்படுவதற்கும் குதிரை சிறப்புமிக்கதாக இருப்பதற்கும் புகைப்படத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.
ரத சப்தமி பலன்கள்:
ரதசப்தமி தை அமாவாசையின் ஏழாவது நாளாக கொண்டாடப்படுவதால் ஏழு எருக்கம் செடி இலைகளை வைத்து வழிபட வேண்டும். தலை தோள்பட்டை போன்ற இடங்களில் இலைகளை வைத்து வழிபட வேண்டும். பெண்களாக இருந்தால் தலையில் மஞ்சளும் அட்சதியும் வைத்தும், ஆண்களாக இருந்தால் எருக்கம் இலையை தலையில் வைத்து நீராடி வரவேண்டும். இதன் மூலமாக தெரிந்தோ, தெரியாமலோ செய்த 7 பிறவி பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். அதன் பிறகு விரதத்தை மேற்கொண்டு சூரிய பகவானை மனதார நினைத்து வேண்டினால் நாம் நினைத்த செயல் நிறைவேறும். தொழில் தொடங்குவதற்கு இந்த நாள் மிக சிறப்பான நாளாக விளங்குகிறது. நம் தேடும் புகழ் செல்வம் அனைத்தும் இந்த நாள் பெற்று தருவதாக குறிப்பிட்டுள்ளது.