- Home
- Cinema
- மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
ஆம், அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது மிகவும் புதிய உறவு. தங்கள் உறவை பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை.

இப்போது நாம் சொல்லப் போகும் செய்தி, தனுஷோ, அவர் தரப்போ வெளியே கசிய விட்ட தகவல் அல்ல. சைலன்ட்டாக மிக மிக சைலன்ட்டாக காதலர் தினத்தில் நடக்க இருக்கிறது. அவரது காதல் மூலமாக வெளியே கசிந்த விஷயம்தான் இது. ஒரு எலந்த பழ அளவு காதல் சமாச்சாரம், பலாப்பழம் சைசுக்கு பப்ளிசிடியாகி தனுஷ்- மிருணாள் தாகூர் உறவு கல்யாண மேடைக்கு வந்தே விட்டது.
ஆம்... 42 வயதான தனுஷ் 33 வயதான நடிகை மிருணாள் தாகூரை 2026 பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத் திருமணம் செய்ய உள்ளதாக தகவல். நீண்ட காலமாக ஒருவரையொருவர் காதலித்து வரும் தனுஷ் - மிருணாள் தாகர் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். தனுஷ் - மிருணாள் ஆகியோரின் இந்தத் திருமணம் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் ஒரு தனிப்பட்ட விழாவாக இருக்கும்.
தனுஷ்-மிருணாள் திருமண வதந்திகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், இந்த வதந்திகளை உறுதிப்படுத்தியோ அல்லது மறுத்தோ அவர்கள் இருவரும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
மிருணாள் தாகூர்- தனுஷின் காதல் உறவு பற்றிய வதந்திகள் நீண்ட காலமாகவே செய்திகளில் இடம்பிடித்து வருகின்றன. இது அனைத்தும் ஆகஸ்ட் 2025-ல், மிருணாள் நடித்த 'சன் ஆஃப் சர்தார் 2' படத்தின் பிரீமியரில் இந்த இருவரும் ஒன்றாக இருந்தபோது தொடங்கியது. இதற்கு முன்னதாக, தனுஷ் நடித்த 'தேரே இஷ்க் மே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு விழாவில் மிருணாள் கலந்துகொண்டதும் பலரின் புருவங்களை உயர்த்தியது. சுவாரஸ்யமாக, மிருணாள் இன்ஸ்டாகிராமில் தனுஷின் சகோதரிகளான டாக்டர் கார்த்திகா, விமலா கீதா ஆகிய இருவரையும் பின்தொடர்கிறார்.
நம்பகமான ஒரு ஆதாரம், தனுஷ் - மிருணாள் காதலிப்பது குறித்து அவர்களது உறவினர்கள், "ஆம், அவர்கள் காதலிக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இது மிகவும் புதிய உறவு. தங்கள் உறவை பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை. அதே நேரத்தில், அவர்கள் வெளியே செல்வதைப் பற்றியோ அல்லது மற்றவர்களின் கண்ணில் படுவதைப் பற்றியோ கவலைப்படவில்லை. அவர்களின் மதிப்புகள், விருப்பங்கள், எண்ணங்களைப் பொறுத்தவரை இருவரும் மிகவும் ஒத்தவர்களாகவும், ஒருவருக்கொருவர் இணக்கமானவர்களாகவும் இருப்பதால், அவர்களின் நண்பர்கள் இந்த உறவுக்கு உண்மையாகவே ஆதரவளிக்கிறார்கள்" என்கின்றனர்.
ஆனாலும், கடந்த ஆண்டு மிருணாள், தனுஷ் "ஒரு நல்ல நண்பர் மட்டுமே" என்று தெளிவுபடுத்தி, அவர்கள் காதலிப்பதாக எழுந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தனுஷைப் பொறுத்தவரை, அவர் முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 18 ஆண்டுகள் திருமணம் செய்திருந்தார். பின்னர் 2022-ல் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த முன்னாள் தம்பதியினர், தனுஷின் 2003 ஆம் ஆண்டு வெளியான 'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தனர். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
