நடிகை அசினா இது? 40 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க...! கணவர் பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோ
நடிகை அசினின் கணவர் ராகுல் சர்மா பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவை விட்டு விலகிய போதிலும், அசின் மீதான ரசிகர்களின் அன்பு இன்னும் குறையவே இல்லை.

Asin latest photo
மலையாளத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அசின். விஜய், சூர்யா, ரவி மோகன் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டிலும் கால்பதித்த அசின், திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. அதன் பிறகு அசின் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
அசின் கணவரிடம் முன்வைக்கப்படும் கேள்வி
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அசினுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்து அவரது கணவரும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனருமான ராகுல் சர்மா ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். இது அவர்களது 10வது திருமண நாள் ஆகும். ராகுலின் பதிவிற்குப் பிறகு, வாழ்த்துகளுடன் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அசின் ஒரு சிறந்த நடிகை என்றும், ஏன் அவரை நடிக்க அனுமதிக்கவில்லை என்றும் ரசிகர்கள் ராகுலிடம் கேட்கின்றனர்.
அன்பை பொழியும் ரசிகர்கள்
பெரும்பாலானோரின் கேள்வி இதுதான். அவர் இப்போது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்றும் பலர் கேட்கின்றனர். எது எப்படியோ, சினிமாவை விட்டு விலகிய பிறகும் அசின் மீதான சினிமா ரசிகர்களின் பிரியம் குறையவில்லை என்பதற்கு இந்த கமெண்டுகளே சாட்சி. ஜனவரி 19 அன்று அசின் மற்றும் ராகுல் சர்மாவின் திருமண நாள். 'நம்பமுடியாத இணை நிறுவனர்' என்று அசினை ராகுல் வர்ணித்துள்ளார்.
அசின் லேட்டஸ்ட் போட்டோ
அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : "அவளுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக நான் இருப்பது அதிர்ஷ்டம்! என் அன்பே.. 10வது திருமண நாள் வாழ்த்துகள். நம் வீட்டையும் என் இதயத்தையும் ஒரு உயர்-வளர்ச்சி ஸ்டார்ட்அப் போல நீ வழிநடத்த, உன் வாழ்க்கையின் செட்டில் நான் தினமும் ஆஜராகிவிடுவேன். நாம் இணைந்து நம்பமுடியாத ஒரு எதிர்காலத்தை உருவாக்குவோம்", என்பதே ராகுலின் பதிவு. அசினுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வயது 40 ஆனாலும், அன்றும் இன்றும் அசின் ஒரே மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் புகைப்படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

