MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Asin Daughter Arin: சிண்ட்ரெல்லாவாக மாறிய அசின் மகள் அரின்! அழகில் அம்மாவையே மிஞ்சிய லேட்டஸ்ட் போட்டோஸ்!

Asin Daughter Arin: சிண்ட்ரெல்லாவாக மாறிய அசின் மகள் அரின்! அழகில் அம்மாவையே மிஞ்சிய லேட்டஸ்ட் போட்டோஸ்!

நடிகை அசின் மகள் அரினுக்கு 6 வயது ஆகும் நிலையில்... இவரின் பிறந்தநாள் புகைப்படத்தை சமீபத்தில் அசின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

2 Min read
manimegalai a
Published : Dec 26 2023, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கேரளாவை சேர்ந்த நடிகை அசின், ஒரு மாடலாக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர். தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான, 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து... அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட துவங்கினார்.
 

26

உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த அசின்... கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கின் மூலம் பாலிவுட் திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக நடித்த அசீன், சல்மான் கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்தார்.

நடிப்புக்கு எதிராக சதி.. படிப்பில் சாதித்த காமெடி நடிகர்! B.Lit பர்ஸ்ட் கிளாசில் பாஸ்.. குவியும் வாழ்த்துக்கள்
 

36

சல்மான் கானின் நண்பரும், மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் ஓனருமான ராகுல் சர்மா என்பவருடன் அசீனுக்கு ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இதை தொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு ராகுல் ஷர்மாவை அவரின் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்துகொண்டார். 
 

46

இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது.  ராகுல் சர்மாவை கரம்பிடித்த பின்னர் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகினார் அசின். திருமணமான ஒரே ஆண்டில், அதாவது  2017-ம் ஆண்டு அசின் - ராகுல் தம்பதிக்கு அரின் என்கிற பெண் குழந்தை பிறந்தது.

புடிச்சாலும் புளியங்கொம்பு.. ராதா மகள் கார்த்திகாவின் கணவர் ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

56

அரினுக்கு தற்போது 6 வயதாகும் நிலையில், அசின் மகளின் ஒவ்வொரு பிறந்தநாள் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் போஸ்ட் பண்ணுவதை மட்டும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த அரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களின் போட்டோசை இவர் வெளியிட்ட நிலையில் அவர் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

66

6-ஆவது பிறந்தநாளில் அரின் சிண்ட்ரெல்லா போல் மாறியுள்ளார்... உடை முதல் கேக் உள்ளிட்ட அணைந்து அலங்காரங்களும், சிண்ட்ரெல்லா தீம்முடன் இதன்பெற்றிருந்தது. மேலும் குட்டி குழந்தையாக பார்த்த அரின் அழகில் அம்மாவை மிஞ்சும் விதத்தில் செம்ம கியூடாக உள்ளார் என ரசிகர்கள் கூறி வருவது மட்டும் இன்றி... பலரும் தங்களின் வாழ்த்துக்களை அரினுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved