- Home
- Gallery
- அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?
அசின், பூஜா, சுவலட்சுமி என தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன 7 ஹீரோயின்ஸ்! யார் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போன 7 நடிகைகள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

திரையுலகில் அறிமுகமாகும் சில நடிகைகள் வந்த வேகத்திலேயே வாய்ப்பு கிடைக்காமல் மூட்டையை கட்டி விடுவார்கள். ஆனால் இன்னும் சில நடிகைகளோ சில படங்களில் நடித்து அவை ஹிட் படங்களாக அமைந்த போதிலும் கூட, நடிப்பை விட்டுவிட்டு வேறு சில காரணங்கள் காரணமாக திரையுலகில் இருந்து விலகுவது உண்டு. அப்படி திரையுலகில் இருந்து காணாமல் போன 10 நடிகைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம் .
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இவர், தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட எல்லாமே செம்ம ஹிட். கடைசியாக 'காவலன்' படத்தில் தளபதியுடன் சேர்ந்து நடித்திருந்தார். பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்ததும், மீண்டும் தென்னிந்திய திரையுலகின் பக்கமே தலை காட்டாத அசின், சல்மான் கானின் நண்பரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் CEO ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு ஒரேயடியாக திரையுலகை விட்டு விலகி விட்டார்.
Suvalakshmi
சுவலட்சுமி:
பார்க்கமே செம்ம ஹோம்லியாக தோன்றி, ரசிகர்கள் மனதில் 1000 பட்டாம் பூச்சியை ஒரு காலத்தில் பறக்கவிட்டவர் தான் சுவலட்சுமி. இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஆசை, விஜய்க்கு ஜோடியாக நடித்த லவ் டுடே, நிலாவே வா, போன்ற பெரும்பாலான படங்கள் ஹிட் லிஸ்டில் தான் உள்ளது. கல்கத்தாவை சேர்ந்த இவர், Swagato Banerjee என்பவரை 2002-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு மொத்தமாக திரையுலகில் இருந்து விலகி தற்போது ஜெனிவாவில் வசித்து வருகிறார்.
Guna actress
ரோஷினி:
மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு பின்னர், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேச படும் படமாக மாறிய... குணா படத்தில் ஹீரோயினாக நடித்த ரோஷினி, இந்த ஒரே ஒரு படத்தை நடித்து முடித்து விட்டு அமெரிக்கா சென்று செட்டி ஆகி விட்டார். குணா படத்தில் நடிக்க வைக்க புது முகம் ஒருவரை தேடிய போது விளம்பரத்தில் ரோஷினியை பார்த்து, அவரையே சந்தான பாரதி ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தில் கூட இவருக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றாலும்... கேரக்டர் பிடித்ததால் நடித்து கொடுத்தார். இந்த படத்தில் நடித்த முடித்ததும் ஒட்டு மொத்தமாக திரையுலகில் இருந்தே விலகினார் ரோஷினி.
கோபிகா:
தமிழில் ஆட்டோகிராப், தொட்டி ஜெயா, எம்.மகன், போன்று சில படங்களில் நடித்திருந்தாலும்... அதிக படியான ரசிகர்களை கவர்ந்தவர் தான் கோபிகா. மலையாள பைங்கிளியான இவர், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கவில்லை என்றாலும், தற்போது வரை தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த, மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒட்டுமொத்தமாக சினிமாவுக்கு குட் பை சொன்னார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜா:
தமிழில் ஜெஜெ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, தம்பி, அட்டகாசம், உள்ளம் கேட்குமே, போன்ற பல படங்களில்... வெரைட்டியான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பூஜாவின் டெடிகேஷனான நடிப்பு பாராட்டுகளை குவித்தது. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அதன் பின்னர் தமிழ் படங்கள் பக்கமே தலையை காட்டவில்லை.
2002 ஆம் ஆண்டு கும்மாளம் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரதி. இதை தொடர்ந்து தங்கர் பச்சானின் சொல்ல மரந்த கதை படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பர். அவர் சத்யராஜ் நடித்த அடி தாடி உட்பட சில தமிழ் படங்களை மட்டுமே நடித்தார். தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் ஆந்திராவில் கரை சேர்ந்த இவர் தற்போது எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் எங்கிற தகவலே இல்லை.
மோனிகா:
குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் கதாநாயகியாக மாறியவர். குறிப்பாக அழகி படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதே போல் 23-ஆம் புலிகேசி படத்திலும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். அதிரடியாக இஸ்லாம் மதத்திற்கு மாறிய மோனிகா, பின்னர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரையே திருமணம் செய்து கொண்டு, திரையுலகத்தில் இருந்தே காணாமல் போனார். இவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத புதிராகவே உள்ளது.