MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் நோ யூஸ்.. NDA மூழ்கும் கப்பல்.. போட்டுத் தாக்கிய காங்கிரஸ்!

பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் நோ யூஸ்.. NDA மூழ்கும் கப்பல்.. போட்டுத் தாக்கிய காங்கிரஸ்!

NDA கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல; 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Jan 21 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
பரபரக்கும் தமிழக அரசியல் களம்
Image Credit : X

பரபரக்கும் தமிழக அரசியல் களம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன், இன்று மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாமல் கூட்டணியை விட்டு வெளியேறிய டிடிவி இன்று மீண்டும் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளார்.

டிடிவிக்கு இபிஎஸ் வாழ்த்து

டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளதை எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். டிடிவி இபிஎஸ்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், NDA மூழ்கும் கப்பல் என்றும் எத்தனை பேர் கூட்டணிக்கு வந்தாலும் வெற்றி பெற மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்
Image Credit : Asianet News

தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ''தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழக மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

அந்த கூட்டணியில் இணைந்துள்ள அமமுக தலைவர் நேற்று வரை துரோகி என்றும் உலகத்தில் துரோகிக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டுமானால் அவருக்கு கொடுக்கலாம் என பேசியிருக்கிறார்.

பிரதமர் மோடி 100 முறை வந்தாலும் பயன் இல்லை

இனி எப்படி அவரோடு களம் காணப்போகிறார்? அவரோடு மேடையேற போகிறார்? வாக்கு கேட்க போகிறார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தவுடன் அவருடைய பெயரை சொல்வதற்கே தவிர்க்கிறார்.

 ஆகவே இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல; 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Related Articles

Related image1
இபிஎஸ்-க்கு நெஞ்சார்ந்த நன்றி.. ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.. பாச மழை பொழிந்த டிடிவி தினகரன்!
Related image2
பாஜக வழிக்கு வந்த டிடிவி.. பிடி கொடுக்காத பிரேமலதா.. தேமுதிக யாருடன் கூட்டணி? அதிரடி அறிவிப்பு!
33
கல்வி நிதி கொடுக்க மறுக்கிறார்கள்
Image Credit : Social Media

கல்வி நிதி கொடுக்க மறுக்கிறார்கள்

தேசிய கல்விக்கொள்கையின் மும்மொழிக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான் தமிழகத்துக்கு கல்வி நிதியான 3,400 கோடி ரூபாய் கொடுப்போம் என அடம்பிடிக்கிற பாஜக, தமிழக மக்களை மண்டியிட வைப்போம் என்று சொல்லும் பாஜக, எப்படி அதிமுகவுடன் சேர்ந்து தமிழக மக்களுக்காக வாக்கு கேட்பார்கள்?

 மக்களும் எப்படி வாக்களிப்பார்கள்? என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது. ஓடிசா, பீகர் போனால் தமிழர்களை குறை சொல்லும் பிரதமர் மோடி, தன்னை எப்படி தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என நினைக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரதமர் மோடி
செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rs 2500 Women Scheme: பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை.. முதலமைச்சர் விஜய் கொடுக்கப்போகும் பரிசு - எப்போது?
Recommended image2
Tamilnadu Job: தமிழகத்திற்கு வந்த ரூ.1000 கோடி முதலீடு! இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை ரெடி! மாஸ் காட்டும் முதல்வர் விஜய்!
Recommended image3
Now Playing
"விஜய் கூட இன்னும் கூட்டணியே அமையல! ஸ்டாலின் அண்ணன்கிட்ட பேசிட்டேன்! - திருமாவளவன்
Related Stories
Recommended image1
இபிஎஸ்-க்கு நெஞ்சார்ந்த நன்றி.. ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம்.. பாச மழை பொழிந்த டிடிவி தினகரன்!
Recommended image2
பாஜக வழிக்கு வந்த டிடிவி.. பிடி கொடுக்காத பிரேமலதா.. தேமுதிக யாருடன் கூட்டணி? அதிரடி அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved