MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சிறையில் கதறி துடித்த குற்றவாளி.. 17 கைதிகள் சேர்ந்து போட்ட பக்கா ஸ்கெட்ச்..! சிறையில் நடந்தது என்ன?

சிறையில் கதறி துடித்த குற்றவாளி.. 17 கைதிகள் சேர்ந்து போட்ட பக்கா ஸ்கெட்ச்..! சிறையில் நடந்தது என்ன?

தேனி மாட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் கூட்டாக காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. தப்பி ஓடியவர்களில் 4 கைதிகளை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர்.

2 Min read
Author : Asianet News
Published : Oct 27 2026, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேனி சிறையைில் என்ன நடந்தது? கைதிகள் தப்பிய பின்னணி என்ன?
Image Credit : Asianet News

தேனி சிறையைில் என்ன நடந்தது? கைதிகள் தப்பிய பின்னணி என்ன?

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தச் சிறையில் ஒரே அறையில் 17 கைதிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அக்டோபர் 26-ம் தேதி இரவு, கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற கைதிகள் சத்தமிட்டுள்ளனர். இதையடுத்து, நிலைமையைச் சரிபார்க்க சிறைக் காவலர்கள் அறைக்குள் சென்றுள்ளனர்.

அப்போது, கைதிகள் காவலர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறியது உண்மையானதா அல்லது தப்பிப்பதற்காகத் திட்டமிட்டு நாடகமாடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
காவலர்களுக்குக் காயம் – மருத்துவமனையில் அனுமதி
Image Credit : Asianet News

காவலர்களுக்குக் காயம் – மருத்துவமனையில் அனுமதி

கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைக் காவலர் தங்கப்பாண்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மேலும் இரண்டு காவலர்களுக்குச் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த காவலர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

34
தப்பிய கைதிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைப்பு
Image Credit : Asianet News

தப்பிய கைதிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைப்பு

17 கைதிகள் தப்பியோடிய தகவல் கிடைத்ததும் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் உள்ளிட்ட அதிகாரிகள் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

தப்பியோடிய கைதிகளைப் பிடிப்பதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தென்மண்டலக் காவல்துறை ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியச் சாலைகளில் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக–கேரள எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

ஒரே நேரத்தில் 17 விசாரணைக் கைதிகள் சிறையிலிருந்து தப்பிய சம்பவம், சிறையின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கைதிகள் தப்பிய விதம், பாதுகாப்புப் பணியில் ஏற்பட்ட குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா, சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

44
4 கைதிகளை மடக்கிப்பிடித்த போலீஸ்..
Image Credit : Asianet News

4 கைதிகளை மடக்கிப்பிடித்த போலீஸ்..

17 பேர் தப்பி ஓடியதும் உஷாரான காவல் துறையினர் சிறையின் பின்புறம் உள்ள வனப்பகுதி, மாவட்ட சோதனைச் சாவடிகளில் பணியை தீவிரப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் மறைந்திருந்த கைதிகள் ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் உட்பட 4 கைதிகளை காவல் துறையினர் கைது செய்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பிற கைதிகளை தேடும் பணி மிக தீவிர நடைபெற்று வருகிறது.

About the Author

AN
Asianet News
Asianet News is a trusted name in Indian journalism, known for delivering accurate, timely, and impactful news. With decades of experience, we excel in covering regional, national, and international stories, ensuring our readers stay informed about the topics that matter most.Whether through breaking news, investigative features, or nuanced opinion pieces, Asianet News remains your reliable source for comprehensive and credible content.Stay connected with Asianet News for stories that matter
குற்றம்
காவல்
காவல் நிலையம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Aavin Price Update: நெய் முதல் மைசூர்பாக் வரை.. ஆவின் பொருட்களின் புதிய விலை என்ன?
Recommended image2
Cyclone Alert: அச்சமூட்டும் புயல்.! 140 கி.மீ வேகத்தில் காற்று வீசினால் என்ன நடக்கும்? இதையெல்லாம் மட்டும் செய்யவே கூடாது.!
Recommended image3
Now Playing
கொடைக்கானலில் தொடரும் கனமழை : சாலையில் பாறைகள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி!
Related Stories
Recommended image1
Anbil Mahesh: அங்கீகாரப் புகார் முதல் கைது வரை.. அன்பில் மகேஷ் வழக்கில் அடுத்தது என்ன? பரபரக்கும் திமுக
Recommended image2
Aavin Price Update: நெய் முதல் மைசூர்பாக் வரை.. ஆவின் பொருட்களின் புதிய விலை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved