- Home
- Spiritual
- வக்கீலுக்கு படிக்க ஆசையா? சட்டப் படிப்பில் சாதிக்கச் செல்ல வேண்டிய கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில்!
வக்கீலுக்கு படிக்க ஆசையா? சட்டப் படிப்பில் சாதிக்கச் செல்ல வேண்டிய கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில்!
Kovur Sundareswarar Temple for Law students and Lawyers in Chennai : வழக்கறிஞருக்கு படிக்க விரும்புவர்கள் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும், கோயில் எங்கு இருக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சட்டப் படிப்பில் சாதிக்கச் செல்ல வேண்டிய கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில்
சென்னை குன்றத்தூர் அடுத்துள்ள கோவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலம் தான் நாம் பார்க்க இருக்கும் கோயில் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில். இங்கு மூலவராக ஸ்ரீ சுந்தரேஸ்வரர் இருக்கிறார். இதே போன்று தாயாராக சௌந்தராம்பிக்கை பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். காமாட்சி அம்மன், பஞ்சாக்னியில் அதாவது நெருப்பில் தவம் செய்து கொண்டிருந்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. காமாட்சி அம்மனின் தவம் மிகவும் உக்கிரமாக இருந்ததால், சுற்று முற்றும் வெப்பமாக மாறி, இந்த அதீத வெப்பத்தால் எல்லா உயிர்களும் துன்பப்படத் தொடங்கின. ஆனால், சிவன், தன் கண்களை மூடி ஆழ்ந்த தியானம் செய்து வருவதால், சிவன் இதை உணரவில்லை. எனவே, தவத்தின் வெப்பத்தில் இருந்து உலகைக் காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர் முனிவர்கள், தேவர்கள். மகாவிஷ்ணு, மகாலட்சுமியை உலகைக் காக்கும்படி கட்டளையிட்டார்.
சிறப்புகள்:
இந்த இடத்திற்கு பசு வடிவில் வந்து, சிவனிடம், ‘உலகே காப்பாற்றப்பட வேண்டும் என்று சிவனிடம் வேண்டி, சிவனை வணங்கி, ஸ்ரீமகாலட்சுமி தேவி, இங்கு வந்து, சிவனை வணங்கி, ‘இந்த உலகத்தைக்காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார்.தேவியின் பிரார்த்தனையால் மகிழ்ந்த சிவபெருமான், தன் கண்களை திறந்து, அந்த இடத்தின் வெப்பம் தணிய, குளிர்ச்சியை அடைந்தார். ஸ்ரீமகாலட்சுமி பசு வடிவில் இங்கு வழிபட்டதால் இத்தலம் கோபூரி. அதாவது தமிழ் மொழியில் கோ என்றால் பசு என்று அழைக்கப்படும் பின்னர் கோவூர் என பெயர் பெற்றது.
சிறப்புகள்:
சென்னையில் உள்ள நவகிரக கோவில்களில் கோவூர் சுந்தரேஸ்வரர் கோயிலும் ஒன்று இங்கு மூலவராக இருப்பவர் ஈஸ்வரர் இங்கு அம்மையார் சன்னதியில் உள்ளது. சௌந்தர் அம்பிகா தாயார் இவருக்கின்றி தனி சன்னதி ஒன்று உள்ளது. ராஜகோபுரங்கள் இருந்த அழகிய கோவில் இக்கோயிலில் வீரபத்திரர், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். நவகிரகங்கள் உள்ளன. 63 நாயன்மாரும் இங்கு உள்ளனர். அருகில் உள்ள ‘குன்றத்தூர்’ என்ற ஊரில் பிறந்த சேக்கிழார், இந்த கோயிலிலிருந்துதான் ‘பெரிய புராணம்’ எழுதத் தொடங்கினார் என்று புராணங்களில் கூறப்படுகிறது.
பலன்கள்:
புதன் கிரகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் சிறப்பு என்று கூறப்படுகிறது. சுந்தரேஸ்வரரை வந்து வழங்கினார் கல்வியிலும் பேச்சாற்றலிலும் சிறந்து விளங்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கறிஞருக்கு படிக்க விரும்புபவர்கள் இங்கு வந்து சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தால் நாம் நினைத்ததை அடையலாம் என்று கூறப்படுகிறது.