MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • செங்கோட்டையனுடன் மோதல்?.. உண்மையை உடைத்து பேசிய புஸ்ஸி ஆனந்த்.. பரபரப்பு விளக்கம்!

செங்கோட்டையனுடன் மோதல்?.. உண்மையை உடைத்து பேசிய புஸ்ஸி ஆனந்த்.. பரபரப்பு விளக்கம்!

Sengottaiyan vs Bussy Anand: தவெக மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும் இடையே மோதல் என தகவல் வெளியான நிலையில், இது குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Jan 21 2026, 06:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய்யை சுற்றி வலம் வரும் பிரச்சனைகள்
Image Credit : Asianet News

விஜய்யை சுற்றி வலம் வரும் பிரச்சனைகள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும் நிலையில், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பார்க்கப்படும் நடிகர் விஜய்யின் தவெக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒருபக்கம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை, மறுபக்கம் ஜனநாயகன் ரீலீஸ் ஆகாமல் முடங்கி கிடப்பது என விஜய்யை சுற்றி பிரச்சனைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் மோதலா?

இது போதாதென்று தவெகவில் உட்கட்சி பூசல் எழுந்துள்ளது விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 50 ஆண்டு காலம் அரசியலில் அனுபவம் வாயந்த செங்கோட்டையனுக்கும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், புஸ்ஸி ஆனந்த் மதிக்காததால் செங்கோட்டையன் தவெகவில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

24
செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்
Image Credit : Asianet News

செங்கோட்டையன் கொடுத்த விளக்கம்

இதனால் பதறியடித்து விளக்கம் கொடுத்த செங்கோட்டையன், ''சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர். அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம்.

உண்மைக்கு மாறான செய்தி

அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம். 

உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்'' என்று கூறியிருந்தார்.

Related Articles

Related image1
பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
Related image2
என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காக தான்.. மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்..
34
புஸ்ஸி ஆனந்தும் விளக்கம்
Image Credit : X

புஸ்ஸி ஆனந்தும் விளக்கம்

இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் 'எனக்கும் செங்கோட்டையனுக்கும் மோதல் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்' என்று விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய புஸ்ஸி ஆனந்த், ''அண்ணனுக்கும் (செங்கோட்டையன்) எனக்கும் சங்கடம் வந்து விட்டதாக கூறுகின்றனர். 

எங்க அண்ணன் 50 ஆண்டு கால அரசியலில் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து விட்டு வந்துள்ளார். யார் அரசியல் பண்ணுவார்கள். யார் அரசியல் பண்ண மாட்டார்கள் என்பதை பார்த்தவுடன் செங்கோட்டையன் சொல்லி விடுவார்.

44
சின்ன சின்ன சண்டைகள் கூட இல்லை
Image Credit : Asianet News

சின்ன சின்ன சண்டைகள் கூட இல்லை

எங்களுக்குள் மனக்கசப்பு என எதுவுமோ கிடையாது. எங்களை பொறுத்தவரை நாங்கள் அனைவரும் தளபதியின் தொண்டர்கள் தான் என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 செங்கோட்டையனுக்கும், எனக்கும் மனக்கசப்பு வந்ததாக வெளியான செய்திகள் முழுக்க முழுக்க தவறானது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் கூட இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
செங்கோட்டையன்
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுகவை வீழ்த்த பிளான் ரெடி.. தீய சக்தியை வேரறுப்பேன்.. சபதம் எடுத்த சசிகலா!
Recommended image2
பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும் நோ யூஸ்.. NDA மூழ்கும் கப்பல்.. போட்டுத் தாக்கிய காங்கிரஸ்!
Recommended image3
பாஜக வழிக்கு வந்த டிடிவி.. பிடி கொடுக்காத பிரேமலதா.. தேமுதிக யாருடன் கூட்டணி? அதிரடி அறிவிப்பு!
Related Stories
Recommended image1
பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
Recommended image2
என் உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காக தான்.. மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved