- Home
- Tamil Nadu News
- பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
உட்கட்சி பூசல், அதிகார போட்டி இல்லாத கட்சிகளே இல்லை எனலாம். ஏன் நீண்ட நெடிய திமுக, அதிமுகவில் கூட இந்த பிரச்சனைகள் உண்டு. ஆனால் அதிகார மோதலை ஒரு கட்சியின் தலைவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்தே அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அமையும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுக 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளது.
பாஜகவை கூட்டணியில் சேர்த்துள்ள எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. வரும் தேர்தலில் இந்த இரு பெரும் கட்சிகளுக்கு அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் தவெக.
ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த் அதிகார மோதல்
விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருப்பதால் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு தவெக கடும் சவால் அளிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு வலுசேர்க்கும்விதமாக செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் என மூத்த அரசியல் தலைவர்கள் தவெகவில் ஐக்கியமாகி வருவது விஜய்க்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி தேர்தலை எதிர்கொள்ள தவெக ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெகவில் புஸ்ஸி ஆனந்த் தான் ராஜ்ஜியம்
விஜய் கட்சி ஆரம்பிக்கவே முக்கிய காரணம் புஸ்ஸி ஆனந்த் தான். இதை மறக்காத விஜய், புஸ்ஸி ஆனந்த்துக்கு உட்சபட்ச அதிகாரம் கொடுத்துள்ளார். அரசியலில் 50 ஆண்டு காலம் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் வந்த பிறகும் அவர் புஸ்ஸி ஆனந்துடன் கலந்தாலோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்தார். இதனால் தவெகவில் புஸ்ஸி ஆனந்த் தான் ராஜ்ஜியம் தான் கொடிகட்டி பறக்கிறதாம்.
ஆதவ் அர்ஜுனா புலம்பல்
தவெக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் புஸ்ஸி ஆனந்த் சொல்வதை தான் கேட்கிறார்களாம். ஆதவ் அர்ஜுனா ஏதும் அறிவுறுத்தல் வழங்கினால் கூட புஸ்ஸி ஆனந்த்திடம் கேட்டு விட்டு சொல்கிறோம் என ஒரு நொடியில் போனை வைத்து விடுகிறார்களாம். இதனால் புஸ்ஸி ஆனந்துக்கு உள்ள மதிப்பு தனக்கு இல்லையே என ஆதவ் அர்ஜுனா புலம்புவதாக கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்துக்கு ஆதரவான மனநிலை
சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் விஜய், புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா புகைப்படங்கள் அடங்கிய பேனர் வைத்த வட்ட செயலாளர் பிரதீப் என்பவரை மத்திய மாவட்ட செயலாளர் பதவி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. விஜய், புஸ்ஸி ஆனந்த் படம் வைத்தால் மட்டும் போதும் என அவர் கூறியதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களும் இதே மனநிலையில் தான் உள்ளனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
விஜய்க்கு தலைவலி
அனுபவம்வாய்ந்த செங்கோட்டையன் வந்துள்ளதால் தனக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைந்து விடக்கூடாது என்பதில் புஸ்ஸி ஆனந்த் கண்னும் கருத்துமாக உள்ளனர். ஆகையால் மாவட்ட செயலாளர்களை கைக்குள் போட்டு அதிகாரத்தை மேம்படுத்தி வருகிறார்.
மறுபுறம் ஆதவ் அர்ஜுனா தனக்கு இருக்கும் ஆதராவளர்களை வைத்து தன்னுடைய அதிகாரத்தை நிரூபிக்க பார்க்கிறார். இப்படியாக புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் மறைமுகமாக அதிகார மோதலில் ஈடுபட்டு வருவது விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
எப்படி சமாளிக்க போகிறார் விஜய்?
உட்கட்சி பூசல், அதிகார போட்டி இல்லாத கட்சிகளை இல்லை எனலாம். ஏன் நீண்ட நெடிய திமுக, அதிமுகவில் கூட இந்த பிரச்சனைகள் உண்டு.
ஆனால் அதிகார மோதலை ஒரு கட்சியின் தலைவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை பொறுத்தே அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அமையும். விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், தவெகவின் வெற்றிக்கு ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த் மோதல் வேட்டு வைத்து விடக்கூடாது என்பதே தவெகவினரின் விருப்பமாக உள்ளது.

