- Home
- Tamil Nadu News
- செங்கோட்டையன் குடுமி புஸ்ஸி ஆனந்த் கையில்..! விஜய் அறிக்கையில் 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!
செங்கோட்டையன் குடுமி புஸ்ஸி ஆனந்த் கையில்..! விஜய் அறிக்கையில் 'அந்த' வார்த்தையை கவனீச்சிங்களா!
தவெகவில் செங்கோட்டையனுக்கு பெரிய பொறுப்பை கொடுத்துள்ள விஜய், அவர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என கூறியிருப்பது தவெகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தவெகவில் ஐக்கியமான செங்கோட்டையன்
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தவெகவில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் இன்று இணைந்தார். தவெகவில் அரசியல் அனுபவம்வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் வருகை அக்கட்சிக்கு பெரும் மாற்றத்தை கொடுக்கும் என்பதால் தவெகவினர் கொண்டாடி வருகின்றனர்.
செங்கோட்டையனுக்கு பெரிய பொறுப்பு
செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தவுடன் அவருக்கு மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் (Chief Coordinator)என்ற உயரிய பொறுப்பை கொடுத்துள்ளார் விஜய். மேலும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையன் இணைவதற்கு முன்பே பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையான அதிகாரம் வழங்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்திருந்த விஜய் கட்சியின் இணைந்தபின் சொன்னதை செய்துள்ளார்.
புஸ்ஸி ஆனந்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்
ஆனால் இது தொடர்பாக வெளிட்ட அறிக்கையில் தான் விஜய் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். அதாவது மேற்கொண்ட பொறுப்புகளில் நியமிக்கப்படும் செங்கோட்டையன் என்னுடனும், கழக பொதுச்செயலாளருடனும் (புஸ்ஸி ஆனந்த்) ஆலோசித்து கழக பணிகளை மேற்கொள்வார் என்று விஜய் கூறியுள்ளார். அரசியலில் மூத்த தலைவரான செங்கோட்டையன் தவெகவில் விஜய்க்கு அடுத்து முக்கிய முடிவெடுப்பார் என்று தகவல்கள் பரவின.
செங்கோட்டையன் தன்னிச்சையாக செயல்பட முடியாது
விஜய் பிரசார பணிகளை முன்னெடுப்பது, விஜய்க்கு ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளை செங்கோட்டையன் வழங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பொதுச்செயலாளரிடம் கலந்து ஆலோசித்து செங்கோட்டையன் பணிகளை மேற்கொள்வார் என விஜய் கூறியிருப்பதன் மூலம், புஸ்ஸி ஆனந்தின் அனுமதி பெற்றே செங்கோட்டையன் முடிவு எடுக்க முடியும் என்ற வகையில் உள்ளது.
புஸ்ஸி ஆனந்த்தின் திறமையின்மை
விஜய்யை அரசியலுக்கு அழைத்து வந்ததே புஸ்ஸி ஆனந்த் தான் என்பது மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தவெக பொதுச்செயலாளராக அவர் திறம்பட பணியாற்றினாரா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தை புஸ்ஸி ஆனந்த் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தால் அந்த சம்பவமே நடந்து இருக்காது. சம்பவம் நடந்த பிறகும் அதற்கு பொறுப்பு ஏற்காமல் கரூர் மாவட்ட செயலாளர் மீது பழி போட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் தலைமறைவானார் புஸ்ஸி ஆனந்த்.
புஸ்ஸி ஆனந்தை மீண்டும் நம்பும் விஜய்
விஜய்க்கு நெருக்கடியான சமயத்தில் அவர் உடன் நிற்காமல் ஓடி ஒளிந்த புஸ்ஸி ஆனந்தை விஜய் நம்பக் கூடாது. அவருக்கு பொறுப்புகள் கொடுக்கக் கூடாது என கட்சியினரே தெரிவித்து வந்தனர்.
ஆனால் கரூர் சம்பவத்துக்கு பிறகும் புஸ்ஸி ஆனந்தை நம்பி பொறுப்புகளை கொடுத்தார் விஜய். இப்போதும் புஸ்ஸி ஆனந்தின் ஆலோசனையின்படியே செங்கோட்டையன் செயல்பட வேண்டும் என விஜய் கூறியிருப்பதை தவெகவினரே ரசிக்கவில்லை.
தவெக தொண்டர்கள் குமுறல்
''அரசியல் அனுபவம்வாய்ந்த செங்கோட்டையன் புஸ்ஸி ஆனந்திடம் கலந்து ஆலோசிக்க வேண்டுமா? அவரை தனியாக செயல்பட விடுங்கள். மீண்டும் புஸ்ஸி ஆனந்தையே நம்பி கொண்டிருந்தால் கட்சி வளராது'' என விஜய் அறிக்கைக்கு கீழே தவெகவினர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

