- Home
- Spiritual
- சுகப்பிரவசம் நடக்க பெண்கள் வழிபட வேண்டிய கோயில் – திருநல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்!
சுகப்பிரவசம் நடக்க பெண்கள் வழிபட வேண்டிய கோயில் – திருநல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்!
Pregnancy protection temple near Kumbakonam Thirunallur Kalyana Sundareswarar : பெண்கள் தங்களுக்கு சுகப்பிரவசம் நடக்க இந்தக் கோயிலுக்கு சென்று வந்தால் எல்லாமே நல்லதாக நடக்கும். அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சுகப்பிரவசம் நடக்க பெண்கள் வழிபட வேண்டிய கோயில்
மனித வாழ்க்கையில் அறிவியலும் ஆன்மிகமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலகட்டத்தில் ஒவ்வொருவரும் எதையோ தேடி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் சரியான உணவு கூட எடுத்துக் கொள்ளலாமல் ஜங்க் உணவுகளை எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக கொள்கின்றனர். நம் முன்னோர்கள் காலத்தில் சத்தான இயற்கை உணவுகளை எடுத்துக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்தனர். அதுமட்டுமின்றி குடும்பத்திற்கு குறைந்தது 5 குழந்தைகள் என்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்று வாழ்ந்து வருகின்றனர். மேலும், அதிலும் ஒரு சிலருக்கு குழந்தை காலதாமதமாகவும் பிறக்கிறது. இன்னும் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. அப்படியே இருந்தாலும் ஒரு சிலருக்கு சுகப்பிரசவம் நடப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் சுகப்பிரசவம் நடக்க வழிபட வேண்டிய கோயில் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அகஸ்தியர் கண்ட திருமண காட்சி:
கும்பகோணம் அருகே உள்ள கோயில் தான் திருநல்லூர் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் பஞ்சவர்ணேஸ்வரர் மூலவராக அருள் பாலிக்கிறார். இந்த மூலவர் 5 விதமான நிறங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இங்குள்ள ஈசன் காலை முதல் மாலை வரை சில வண்ணங்களில் மாறி பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார். இது அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம் எனப்படுகிறது.
அகஸ்தியர் கண்ட திருமண காட்சி:
எம்பெருமான் சிவன் - பார்வதி திருமணம் இமயமலையில் வைத்து நடைபெற்றது. திருமணத்தில் அகத்திய பார்க்க வில்லையாம் அதனால் எம்பெருமான் சிவன் மற்றும் பார்வதி திருமணத்திற்கு உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் திரண்டன. இதனால் வட திசை தாழ்ந்தது. தென் திசை உயர்ந்தது. உலக சமநிலை மாறுவதை சமப்படுத்த அகஸ்தியரை தென் திசைக்கு செல்லும் படி இறைவன் கட்டளையிட்டார்.
சுகப்பிரசவம் நடக்க வழிபட வேண்டிய கோயில்:
உன் பக்தன் எனக்கு மட்டும் தங்களின் திருமணத்தை காண ஆவல் இருக்காதா என கேட்டு வருத்தப்பட, இறைவனின் திருமணக் காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார்.இந்த திருமணக் கோலத்தில் இருக்கும் சிவன் பார்வதியையும் முன் அகஸ்தியர் மற்றொரு சிவ லிங்கத்டை வைத்து பூஜித்து பேறு பெற்றார்.இந்த கல்யாணசுந்தரேஸ்வரர் சிவ லிங்கத்திற்கு பின் இன்றும் கல்யாணசுந்தரேஸ்வரர் - பார்வதி சிலையை காண முடியும்.
சுகப்பிரசவம் நடக்க வழிபட வேண்டிய கோயில்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலில் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும். ஜாதக ரீதியாக மக நட்சத்திரக்காரர்களுக்கு ஏதேனும் கிரக தோஷத்தால் பாதிப்பு இருந்தால் இந்த கோயிலில் வழிபாடு செய்யலாம்.
இங்கே அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்ததால் திருமணத்தில் தடை இருப்பவர்களும் திருமணம் நடைபெறாமல் இருப்பவர்களும் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மக நட்சத்திரக்காரர்களுக்கு இது ஒரு சிறந்த கோயிலாக கருதப்படுகிறது. உலகத்தில் எதுவும் பிரச்சனை இருந்தால் இங்கு வந்து சென்றால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.