What is Ratha Saptami and Reason for Ratha Saptami celebration in tamil : ரத சப்தமி என்பது சூரியன் பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடகிழக்கு திசையை நோக்கித் திருப்புவதாகக் கருதப்படும் ஒரு சிறப்பு நாள்; 

ரத சப்தமி என்பது சூரிய பகவான் தனது ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடகிழக்கு திசையை நோக்கித் திருப்புவதாகக் கருதப்படும் ஒரு சிறப்பு நாள்; இது சூரிய ஜெயந்தி என்றும் கூறப்படுகிறது. இதன் வரலாறு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். சப்தரிசிகளில் ஒருவராக ரிஷி காஷ்யபரின் மனைவி அதிதி கர்ப்பவதியாக இருந்த சமயத்தில் ஒரு நாள் தன்னுடைய கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். அப்போது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு, திறந்து பார்த்த போது, அங்கு ஒரு பிராமணர் தனது பசிக்கு உணவு கேட்டு நின்றார். 

புதன் தோஷத்தால் வேலையில் தடையா? இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கை நிறைய சம்பளத்தில் வேலை கன்ஃபார்ம்!

அவரை காத்திருக்க சொல்லி விட்டு, வீட்டிற்குள் சென்ற அதிதி, மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி விட்டு, அவர் சாப்பிட்ட பிறகு மீதம் இருந்த ஆகாரத்தை எடுத்துச் சென்று அந்த பிராமணனுக்கு கொடுத்தாள். அதற்கு அந்தப் பிராமணர் இப்படி என்னை தாமதப்படுத்தி உணவு அளிக்கிறாய் என்று கேட்டு என்னை உதாசினம் பண்ணுனாயா என்று கேட்க உன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்து போகட்டும் என்று கோபமாக சாபம் விட்டு சென்றார்.

தெப்ப உற்சவம் என்றால் என்ன? நீர் நிலைகளில் சுவாமி உலா வருவதன் ஆன்மீக ரகசியம் இதுதான்!

அதன் பிறகு அதிதி கணவனான ரிஷி காஷ்யபரின் சென்று நடந்ததை கூற அவர் நீ ஒன்றும் பயப்பட வேண்டாம் நமக்கு அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான் என்றும் அவன் உலகத்திற்கு மிகப்பெரிய ஒளியாக திகழ்வான் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு அந்த சூரிய பகவானே அதிதிக்கு மகனாய் பிறந்ததாக கூறப்படுகிறது. சூரிய பகவான் பிறந்த தினமே ரத சப்தமி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்? செய்ய கூடாது, விரதம் இருப்பதன் முக்கியத்துவம் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

வக்கீலுக்கு படிக்க ஆசையா? சட்டப் படிப்பில் சாதிக்கச் செல்ல வேண்டிய கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில்!