இந்த புத்தாண்டு மக்களுக்கு இனிய புத்தாண்டாக அமையட்டும்... பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து!!

By Narendran SFirst Published Dec 31, 2022, 6:51 PM IST
Highlights

புத்தாண்டு பிறக்கப்போகும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

புத்தாண்டு பிறக்கப்போகும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்: 

அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டு வருக, புதுவாழ்வு தருக எனக் கூறியுள்ளார். 

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: 

மலருகின்ற புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். புலரும் புத்தாண்டு, அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும். இருளும் சோகமும் விலகி இருக்க, புதிய ஆண்டு பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி இவற்றையெல்லாம் இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: 

தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு வரட்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: 

சமூக நீதியும், சகோதரத்துவமும் ஓங்கி ஒளிரவேண்டிய காலகட்டத்தில் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்திட மத்திய அரசும், இந்துத்துவா சக்திகளும், சனாதன கூட்டமும் மத்திய அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. இவற்றை எதிர்த்துப் போராடும் அரசியல் கட்சிகளும், பொதுநலனில் அக்கறை உடையோரும், மாநில சுயாட்சியைக் காக்கவும், ஒன்றிய அரசின் அநீதியான போக்கைத் தடுக்கவும் ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிற இந்த நாளில் சபதம் ஏற்றுக்கொள்வோம். இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் திராவிட மாடல் ஆட்சியை அண்ணா காட்டிய வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகுந்த கவனத்துடன் நடத்தி வருகிறார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ‘இந்தியா டுடே’ இதழ் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. மற்ற மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றத்தக்க விதத்தில் இன்றைய திமுக அரசுக்கு நாம் துணையாக ஆதரவு அளிப்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 

மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2023-ம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கை தான் வாழ்க்கை. கடந்த சில ஆண்டுகளின் துயரங்கள் அனைத்தும் துடைத்தெறியப் படும்; அனைத்து துறைகளிலும் இதுவரை இல்லாத முன்னேற்றங்கள் எட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம். புத்தாண்டு நமக்கு மகிழ்ச்சி, மட்டற்ற மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கும்.

காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: 

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. 2014 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் விரோதத்தை மூடி மறைப்பதற்கு வெறுப்பு அரசியலை வளர்த்து, நல்லிணக்கத்தை சீர்குலைத்து வாக்கு வங்கியை விரிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிற போக்கை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. இதனால், இந்தியாவிற்கே உரித்தான வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற பன்முகத் தன்மைக்கு மிகப்பெரிய பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய அணுகுமுறையினால் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை முறியடிக்க ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 110 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரை நோக்கி இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கு மக்களிடையே பேராதரவும், எழுச்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்து மக்கள் அரசின் நலன்சார்ந்த திட்டங்களினால் பெரும் பயனை அடைந்து வருகிறார்கள். எந்த சேதாரமும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாக சென்றடைகின்றன.

இதனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதேநேரத்தில், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக தமிழகம் பல நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, இந்தி, சமஸ்கிருத திணிப்பு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்கிற நடவடிக்கைகள், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தராத போக்கு என மாநில நலன்களுக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய அவலநிலைகளிலிருந்து தமிழகத்தை காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் எண்ணற்ற வெற்றிகளை குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள்அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: 

ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யப்பட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: 

இனம், மதம், மொழி, நாடு ஆகியவற்றையெல்லாம் தாண்டி உலகெங்கும் மக்கள் கொண்டாடும் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். தொழில்களும், விவசாயமும் செழித்தோங்கி, எல்லா வகையிலும் சிறந்த ஆண்டாகவும் உற்சாகம் தருகிற ஆண்டாகவும் 2023 திகழட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: 

ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து.

இதையும் படிங்க: கடந்த ஆண்டில் நடந்த சினிமா, அரசியல், வர்த்தகம், விளையாட்டு, தேசிய மற்றும் உலக ,அளவில் நடந்த திருப்புமுனைகள். ஒரு பார்வை

தமிழகம் மற்றும் தேசிய அளவில் நிகழ்ந்த நிகழ்வுகள்:

தமிழகத்தை அதிர வைத்த தற்கொலைகள்... ஒரு பார்வை!!

இதை மட்டும் நம்பாதிங்க! 2022ம் ஆண்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ‘12 போலிச் செய்திகள்’

2022ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் திருப்பு முனைத் தீர்ப்புகள்

அரசியல்: 

2022ல் மரணம் அடைந்த அரசியல் பிரபலங்கள் ஒரு பார்வை!!

சுற்றுலா:

2022 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயணித்த டாப் 5 இடங்கள் ஒரு பார்வை!!

டெக்னாலஜி: 

2022 இல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 பயனுள்ள WhatsApp Tips & Tricks!

இந்த 2022 ஆண்டில் வெளிவந்த டாப் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்!

ரூ.25 ஆயிரத்திற்குள் நல்ல வரவேற்பைப் பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்!

இந்தாண்டிற்கான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் இதுதான்!

லேப்டாப் வாங்க போறீங்களா… இத பாத்துக்கோங்க!

சினிமா: 

2022-ல் பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து... பாக்ஸ் ஆபிஸ் குயினாக வலம் வந்த நடிகைகள் லிஸ்ட் இதோ

படம் பிளாப் ஆனாலும் சம்பள விஷயத்தில் அவர்தான் டாப்... விஜய், அஜித் முதல் ஷாருக் வரை பிரபலங்களின் சம்பள விவரம்

2022 ஆம் ஆண்டில்... அரிய வகை நோயால் பாதிக்க பட்ட சமந்தா, பூனம் கவுர் உள்ளிட்ட 5 பிரபலங்கள்!

காந்தாரா முதல் லவ் டுடே வரை... கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் ஒரு பார்வை

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 100 ஆசிய பிரபலங்கள் பட்டியல் வெளியீடு... ‘தல’ தோனியை மிஞ்சிய விஜய்

2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் கோடி கோடியாய் வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள் - முழு லிஸ்ட் இதோ

2022 ஆம் ஆண்டில் ரசிகர்களை அதிகம் முணுமுணுக்க வைத்த டாப் 5 பாடல்கள்..!

2022 ஆம் ஆண்டு கூகுளில் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த பிடித்த 'புஷ்பா' பட பாடல்..! எந்த பாடல் தெரியுமா?

ரிலீசுக்கு முன் அடேங்கப்பா... ரிலீசுக்கு பின் அட போங்கப்பா என சொல்ல வைத்த டாப் 5 பெரிய பட்ஜெட் பிளாப் படங்கள்

2022 எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக தோல்வியடைந்த திரைப்படங்கள்!

2022-ல் பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வசூலை வாரிக்குவித்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ

விளையாட்டு: 

2022ம் ஆண்டில் விளையாட்டுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்

2022ல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை சம்பவங்கள்

ஆட்டோமொபைல்ஸ்: 

2022ம் ஆண்டில் விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 எம்பிவி கார்கள்.. எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

அதிக தேடப்பட்டது:  

ஸ்விக்கியில் அம்மாவா..? ‘அம்மா முதல் பெட்ரோல் வரை.!’ 2022ல் ஸ்விக்கியில் மக்கள் தேடியது இதைத்தான்!

2022ம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட நோய்கள் என்னென்ன தெரியுமா.?

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தமிழ் படங்கள் : வலிமையை பின்னுக்கு தள்ளிய லவ் டுடே - முதலிடம் யாருக்கு?

2022 கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரே தமிழ் படம் எது தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ..!

உலக நிகழ்வுகள்: 

ஆப்கன் பூகம்பம் முதல் அழகிப் போட்டி வரை... 2022ல் உலகை உலுக்கிய டாப் 20 நிகழ்வுகள்

அதிர்ஷ்டம் தரும் புள்ளி போட்ட சட்டை உலக நாடுகளின் வினோத புத்தாண்டு கொண்டாட்டம்!

click me!