இந்த 2022 ஆண்டில் வெளிவந்த டாப் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்!

இந்த 2022 ஆண்டு முடிவடையும் நிலையில், சிறந்த மற்றும் உயர்தர செயல்பாடுகளுடன் கூடிய பிரீமியம் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்:

Year Ender 2022: From Apple Iphone 14 To One Plus Nord 2t 5g; Top Smartphones Launched This Year, check details here

2022 ஆம் ஆண்டு என்பது ஸ்மார்ட்போன் துறையில் ஒரு முக்கிய ஆண்டாக உள்ளது. சில பிராண்டுகள் அவற்றின் பிளாக்ஷிப் பிரிவில் கவனம் செலுத்தி, பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டன. குறிப்பாக ஆப்பிள், சாம்சங் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமின்றி,  கூகுள், விவோ, ஒப்போ இன்னும் பல பிராண்டுகள் பல ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வந்தன. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றன. அந்த வகையில், இந்த 2022 ஆண்டு முடிவடையும் நிலையில், சிறந்த மற்றும் உயர்தர செயல்பாடுகளுடன் கூடிய பிரிமீயம் ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்:

Samsung Galaxy S22 Ultra (ரூ. 1,31,999 முதல்):

Samsung Galaxy S22 Ultra ஆனது 2022 ஆம் ஆண்டின் மிகவும் பல்துறை ஃபோன்களில் ஒன்று. தற்போது கிடைக்கும் எந்த ஸ்மார்ட்ஃபோனை விடவும் நல்ல கேமரா அமைப்பைக் கொண்ட இந்த ஃபோனானது, பிரகாசமான, அழகான AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 5G நெட்வொர்க், 100X ஜூம் கேமரா, S-Pen, ஐந்து வருட ஆண்ட்ராய்டு OS பெறுவதற்கான வசதி இதில் உள்ளன.

Apple iPhone 14 Pro (ரூ 1,29,900 முதல்):

ஆப்பிள் ஐபோனின் முந்தைய மாடல்களோடு ஒப்பிடுகையில் ஐபோன் 14 போனில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. பெயருக்கு என ஐபோன் 14 அறிமுகம் செய்யப்பட்டது. கேமரா, பிராசசர் மற்றும் காட்சி அம்சங்கள் ஆகியவற்றில் மட்டும் குறிப்பிடத்தக்க மேம்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. டைனமிக் ஐலேண்ட் செயல்பாடு ஒரு தனித்துவமான பயனர் அனுபவத்தை வழங்குகிறது.

Best in 2022: ரூ.25 ஆயிரத்திற்குள் நல்ல வரவேற்பைப் பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்!

Google Pixel 7 Pro (ரூ. 84,999 முதல்):

புதிய கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது மிகச்சிறந்த ஒன்றாகும். அதன் டிசைன், பேட்டரி ஆயுள், அதிக செயலதிறன் என அனைத்திலும் நற்பெயர் பெற்றுள்ளது. குறிப்பாக அதிகமாக பயன்படுத்தும் போது ஸ்மார்ட்போன் அவ்வளவாக சூடாகுவதில்லை. கேமரா ஹார்டுவேர் முற்றிலும் உயர்தரமானது. AI தொழில்நுட்பத்தில் கேமரா உள்ளது. மேஜிக் அழிப்பான், மோஷன் மோட் ஷாட்கள் உள்ளிட்ட வசதிக்கு நல்ல ஸ்மார்ட்போன். காலை, மதியம், இரவு வெளிச்சம் என எல்லா ஒளி நிலைகளிலும் சிறந்த படங்களைப் பிடிக்கும் என்பதால், மற்ற ஸ்மார்ட்போன்களைக் காட்டிலும் மிக உயர்ந்தது.

வந்துவிட்டது புதிய அப்டேட்! Google Chrome மூலமாகவே பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

One Plus Nord 2T 5G (ரூ. 28,999 முதல்):

OnePlus Nord 2T 5G, முன் மற்றும் பின்புறத்தில் கொரில்லா கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கிறது, இது அதிவேக 5Gக்கு ஏற்றது. மீடியா டெக்கின் அற்புதமான டைமன்சிட்டி 1300 பிராசசர் உள்ளது. பின்புறத்தில், மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருந்தாலும், Nord 2T 5G இன் பிரைமரி கேமரா தான் அதிக வேலைகளைச் செய்யும். நீர் துளியில் இருந்து பாதுகாப்பு, வயர்லெஸ் சார்ஜிங் போன்றவற்றில் மட்டும் குறைபாடு இருப்பதாக விமர்சனங்கள் உள்ளன.

POCO M5 (ரூ. 10,999 முதல்):

இது 6.58-இன்ச் முழு HD+ (2408 x 1080p) LCD திரையுடன் 90Hz ரெப்ரெஷ் ரேட், கார்னிங்கின் கொரில்லா கிளாஸ் 3, ஆகியவை உள்ளன. 6nm MediaTek Helio G99 பிராசசரைக் கொண்டுள்ளது, அதிகபட்ச CPU வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. Android 11-அடிப்படையில், MIUI OS உள்ளது. 5,000mAh பேட்டரி சக்தி, அதற்கு ஏற்ப 18W சார்ஜருடன் வருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios