Asianet News TamilAsianet News Tamil

Best in 2022: ரூ.25 ஆயிரத்திற்குள் நல்ல வரவேற்பைப் பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்!

இந்தியாவில் ரூ.25,000-க்கு உட்பட்ட விலை-பிரிவில் பல ஸ்மார்ட்போன் வெளிவந்த நிலையில், அவற்றில் டாப் 5 ஸ்மார்ட்போன்களை இங்குக் காணலாம்.

Best in 2022: Smartphones for under Rs 25,000 that ruled this year, check details here
Author
First Published Dec 8, 2022, 9:59 AM IST

இந்த 2022 ஆம் ஆண்டில் பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  இருப்பினும் சில ஸ்மார்ட்போன்கள் நல்ல விற்பனையாகின, சிலவை வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் போயின. இங்கு ரூ. 25,000 பட்ஜெட்டில் வெளிவந்த ஸ்மார்ட்போன்களைக் காணலாம். உங்கள் பட்ஜெட் சுமார் ரூ.25,000 ஆக இருந்தால் இதை கருத்தில் கொள்ளலாம்.

1. iQOO Z6 Pro 5G

அன்றாடப் பணிகள் மற்றும் கேமிங்கிற்கு நல்ல செயல்திறனை வழங்கும் அட்டகாசமான ஸ்மார்ட்ஃபோன் iQOO Z6 Pro 5G ஆகும். இதில், HDR10+, 90Hz AMOLED டிஸ்ப்ளே, 1300 nits பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 66W சார்ஜரும், 30 நிமிடங்களில் விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய 4,700mAh பேட்டரியும் உள்ளது 

மேலும்,iQOO Z6 Pro போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடையாது. இருப்பினும் ஒரு ஸ்பீக்கர் இருந்தாலும் நல்ல சத்தமாக இருக்கும்.  Snapdragon 778G SoC பிராசசர் இருபப்தால் Z6 Pro ஸ்மார்ட்போனானது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றது. 6GB RAM + 128GB மெமரியுடன் கூடிய iQOO Z6 Pro 5G  விலை ரூ.22,999 ஆகும். வாடிக்கையாளர்கள் இதனை அமேசானில் வாங்கலாம்.

2. OnePlus Nord CE 2 5G

OnePlus ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் மென்பொருளாகும். OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போன் ரூ. 25,000க்குக் குறைவான விலையில் சிறந்த மென்பொருள் அனுபவத்தை வழங்குகிறது. Nord CE 2 5G போனில், 90Hz ரெப்ரெஷ் ரேட், 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே,  HDR10+ பிளேபேக் உள்ளன. இது தவிர, MediaTek Dimensity 900 SoC  பிராசசர் இருப்பதால், அனைத்து வகையான செயல்திறன் சார்ந்த பணிகளையும் எளிதாகக் கையாள முடியும்.

OnePlus Nord CE 2 5G தற்போது அடிப்படை 6GB RAM + 128GB மெமரி வேரியண்டின் விலை ரூ.23,999 முதல் தொடங்குகிறது, மேலும் நீங்கள் OnePlus இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Amazon India வழியாக ஸ்மார்ட்போனை வாங்கலாம். 

3. Redmi K50i 5G

Redmi K50i ஸ்மார்ட்போனில்Dimensity 8100 SoC பிராசசரில் சுமார் ரூ.27,000 விலையில் தொடங்குகிறது. ஆனால், தற்போது ஆஃபரில் சுமார் ரூ.24,000 விலைக்கு கிடைக்கிறது. Redmi K50i ஆனது திடமான பெரிய 5,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 12, மூன்று வருடத்திற்கான சாப்ட்வேர் அப்டேட், 144Hz ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. இந்த ஸ்மார்ட்போனை Amazon India மற்றும் Xiaomiயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்கலாம்.

Top Best Laptops 2022: லேப்டாப் வாங்க போறீங்களா… இத பாத்துக்கோங்க!

4. Moto G82 5G

மோட்டோ ஜி 82   போனில், விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களில் அடிக்கடி காணப்படும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, Moto G82 ஆனது 6.6-இன்ச் 10-பிட் பொலிட் டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட், பெரிய டிஸ்பிளே உள்ளன. மோட்டோ ஜி82 173 கிராம் எடையும் 7.9 மிமீ தடிமனையும் கொண்டிருப்பதால், ஃபோனைப் பயன்படுத்துவதற்கு ஓரளவுக்கு நன்றாக உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா உள்ளது. 

Moto G82 இன் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களில் Snapdragon 695 SoC பிரசசர் சொல்லலாம். 5,000mAh பேட்டரி, 33W சார்ஜிங், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 உள்ளன. ஒட்டுமொத்தமாக, Moto G82 5G ஆனது, ரூ.25,000க்கு குறைவான விலையில் மட்டும் இல்லாமல், ரூ.20,000 பட்ஜெட்டிலும் சிறந்த தேர்வாக உள்ளது. நீங்கள் . 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி82 ஐ ரூ.19,999 விலையில் பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.

Best 10 Mobiles in India: இந்தாண்டிற்கான டாப் 10 ஸ்மார்ட்போன்கள் இதுதான்!

5. Realme 9 Pro+ 5G

2022 ஆண்டில் வெளிவந்த சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று Realme 9 Pro+ ஆகும், 5G ஸ்மார்ட்போனை விரும்புவோருக்கு ஏற்றது. நல்ல கேமரா செயல்திறனைக் கொண்டுள்ளது. எனவே, நீங்கள் நிறைய Instagram பதிவுகளை போட வேண்டுமென்றால், இந்த ஸ்மாரட்போனை கருதலாம். 50MP Sony IMX766 OIS பிரைமரி கேமரா உட்பட ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

Realme 9 Pro+ போனில் 90Hz AMOLED டிஸ்ப்ளே,  MediaTek Dimensity 920 SoC பிராசசர், 60W சார்ஜர், 4,500mAh சக்தி கொண்ட பேட்டரி, 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி ஆகியவை உள்ளன.  Realme 9 Pro+ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.24,999 ஆகும்.இருப்பினும், வங்கி டெபிடி கார்டு, கிரெடிட் கார்டு  சலுகைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் இருக்கலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios