Top Best Laptops 2022: லேப்டாப் வாங்க போறீங்களா… இத பாத்துக்கோங்க!

புதிதாக லேப்டாப் வாங்க போறீங்களா? மேக் முதல் விண்டோஸ் வரையிலான சிறந்த ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிறந்த லேப்டாப்களின் பட்டியலை இங்குக் காணலாம்.

Best Laptops 2022: Everything You Want To Know Before Purchasing A Laptop

மேக் வாங்கலாமா? விண்டோஸ் வாங்கலாமா?

இந்தக் கேள்வி இப்போதுள்ள தலைமுறையினர் பலருக்கும் இருக்கும். மேக் சிஸ்டமோ, விண்டோஸ் சிஸ்டமோ, இவை இரண்டுமே உங்களுக்கு உள்ள தேவைக்கு ஏற்ப உள்ளதாகும். பொதுவாக ஆப்பிள் சாதனங்களை விரும்புவர்கள், தொழில்நுட்பத்தில் ஆர்வமாக இருப்பவர்கள் மேக் வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே நேரத்தில், பயன்படுத்துவதற்கு நல்ல எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தைத் தேர்வு செய்யலாம்.

எது சிறந்த லேப்டாப்?

சிறந்த லேப்டாப் என்பது விலைக்கு ஏற்பவும்,பயன்பாடுக்கு ஏற்பவும் மாறுபடும். ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒரு லேப்டாப் சிறந்தவையாக இருக்கும். உதாரணத்திற்கு, கேமிங் பயன்பாடு என்றால் அதற்கு ஒரு லேப்டாப் நன்றாக இருக்கும், அலுவலகப் பயன்பாடு என்றால் அதற்கு மற்றொரு லேப்டாப் சிறந்ததாக இருக்கும். எனவே, பட்ஜெட், தேவை ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது இதுதான் சிறந்தது என்று கூறிவிட முடியாது.

Lenovo Ideapad 3

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரியர்களுக்கு லெனோவாவின் ஐடியாபேட் 3 ஒரு சிறந்த தேர்வாகும். அற்புதமான செயல்திறனை வழங்கும் இந்த லேப்டாப் 15.6 அங்குல திரை அளவு, பரந்த கோணத்துடன் உள்ளது. AMD Ryzen 5 பிராசசர், 7 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி, 1.6 கிலோ எடை, , நேர்த்தியான மற்றும் மெலிதான வடிவமைப்பில் வருகிறது. இதன் விலை: ரூ.43,018.

சிறந்த கேமிங் அனுபவத்தைத் விரும்பும் கேமிங் பிரியர்களுக்கு Lenovo Ideapad 3 லேப்டாப் ஏற்றதாக இருக்கும். மேலும் இசை பிரியர்கள், வெப் சீரிஸ்களை அதிகமாகப் பார்ப்பவர்களுக் இந்த லேப்டாப் சரியான தேர்வாகும், ஏனெனில் இது டால்பி ஆடியோ ஸ்பீக்கர்களுடன் வருகிறது.

Mi Notebook Ultra 3.2K

நிறைய எடிட்டிங் மற்றும் போட்டோஷாப் செய்யும் பிளாக்கர்களுக்கு எம்ஐ அல்ட்ராபுக் மடிக்கணினிகள் வாங்கலாம். இது மெலிதான எடை குறைவான லேப்டாப் என்றாலும், செயல்திறன் மற்றும் பேட்டரி சக்தியைப் பொறுத்தவரையில் நன்றாக இருப்பதாக கருத்துகள் வந்துள்ளன. மேலும், இந்த மடிக்கணினிகள் மிகவும் சிறியதாக இருப்பதால்,கல்லூரி மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ஏற்றது. 

இந்த லேப்டாப்பை ஆன் செய்ததும் நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், கைரேகை ஸ்கேனரின் உதவியுடன், நீங்கள் 2 வினாடிகளுக்குள் வேகமாக உள்நுழையலாம். குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் இந்த லேப்டாப்பில் வேலை செய்யலாம். Mi லேப்டாப் விலை: ரூ 60,999.

Best Apps 2022: அட இதெல்லமா டாப் 10 ஆப்ஸ்.. கூகுளின் ரேங்க் பட்டியல் வெளியீடு!

HP Pavilion 15

இந்த HP லேப்டாப்பானது FHD திரை, AMD Ryzen பிராசசர், 16GB வரையிலான டூயல் சேனலுடன் வருகிறது. நல்ல செயல்திறனை வழங்குகிறது. 10ஜிபிபிஎஸ் டிரான்ஸ்மிஷன் வீதம் கொண்ட சிங்கிள் USB-C உள்ளது. மைக்ரோ பெசல் டிஸ்ப்ளே காட்சி அனுபவத்திற்கு உயிர் கொடுக்கிறது. HP லேப்டாப் விலை: ரூ.53,449.

தொழில்ரீதியாக லேப்டாப் விரும்புகிறவர்களுக்கு இந்த லேப்டாப் ஏற்றதாகும். பல்வேறு போர்ட், நிறைய கனெக்ஷன் வசதிகள் உள்ளன. மேலும், டேட்டாவுக்கு நல்ல உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios