Asianet News TamilAsianet News Tamil

Best Apps 2022: அட இதெல்லமா டாப் 10 ஆப்ஸ்.. கூகுளின் ரேங்க் பட்டியல் வெளியீடு!

இந்தியாவில் இந்தாண்டுக்கான டாப் 10 செயலிகளின் பட்டியலை கூகுள் பிளேஸ்டோர் வெளியிட்டுள்ளது. பலவாறான செயலிகள் இதில் உள்ளன. அவற்றில் நல்ல அபிப்ராயம் பெற்ற செயலிகளை இங்குக் காணலாம்.

Google reveals best apps and games in India for 2022, check lists here
Author
First Published Dec 1, 2022, 11:24 PM IST

கூகுள் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டுக்கான கூகுள் பிளேயின் சிறந்த விருதை வென்ற செயலிகளை அறிவித்துள்ளது. Android சாதனங்களுக்கான கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த ஆப்ஸ் மற்றும் கேம்களை பட்டியலிட்டுள்ளது. இந்த 2022 ஆம் ஆண்டை, கொரோனாவுக்கு பிறகான காலம் என்றும், இந்தியா உட்பட, உலகம் முழுவதும் உள்ள பல பயனர்கள், பல்வேறு தேவைகளுக்கு டிஜிட்டல் வழியிலான வசதியை நம்பியுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் கூறுகையில், "தனிப்பட்ட வளர்ச்சி, தினசரி பணிகள், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மற்றும் தொழில் உத்வேகங்கள் உட்பட பல வழிகளில் செயலிகள் மக்களுக்கு உதவுகின்றன என்பதை மீண்டும் கண்கூடாகப் பார்க்கிறோம். அதே நேரத்தில் இந்த புதிய உலகில் பலர் கேம்களுடன் மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர்.

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயலிகளை பல்வேறு பிரிவுகளின் கீழ் கூகுள் பிளே ஸ்டோர் அறிவித்துள்ளது. அதன்படி, வேடிக்கைக்கான சிறந்த ஆப்ஸ் பிரிவில் Turnip - Talk, chat and stream என்ற செயலி பெற்றுள்ளது, அதே நேரத்தில் 'Filo: Instant 1-to-1 tutoring' என்ற தனிப்பட்ட வளர்ச்சிக்கான சிறந்த ஆப் என்ற பெயரைப் பெற்றது. பிளிப்கார்ட் பங்களிப்புடன் செயல்படும் Shopsy Shopping App - Flipkart என்ற ஆப் அன்றாட தேவையில் சிறந்த அத்தியாவசிய செயலி டைட்டிலைப் பெற்றது. Khyaal: senior citizens  என்ற செயலி மூத்த குடிமக்களுக்கான சிறந்த செயலி பெயரபை் பெற்றது.

Samsung Recruitment 2023: சுமார் 1,000 இன்ஜினியர்களை பணியில் அமர்த்த சாம்சங் திட்டம்!

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கேம்களையும் கூகுள் பிளே இந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, Rocket League Sideswipe எனும் ஆப், சிறந்த மல்டிபிளேயர் பட்டத்தைப் பெற்றது. Angry Birds Journey செயலி சிறந்த "பிக் அப் & ப்ளே" விருதுக்கு தகுதிபெற்றது.  இதேபோல், 2022 ஆண்டில் சிறந்த இண்டி கேம் பட்டத்தை Dicey Dungeons பெற்றது, மேலும் தற்போதுள்ள சிறந்த செயலி என்ற பெயரை Clash of Clans பெற்றுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்கள், டேப்லெட்டுகள் மற்றும் குரோம்புக்குகளுக்கான சில குறிப்பிடத்தக்க பிரிவுகளாக முறையே Todoist: to-do list & planner, Pocket: Save, Read, Grow., மற்றும் BandLab – Music Making Studio ஆகிய செயலிகள் இடம்பெற்றுள்ளன.
பயனர்கள் அதிகம் விரும்பும் பட்டியலில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட செயலிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி, இந்தாண்டுக்கான சிறந்த பயனர்கள் தேர்வு செயலியாக Shopsy Shopping App - Flipkart உள்ளது.  கேம் பிரிவில் சிறந்த பயனர்கள் தேர்வாக Angry Birds Journey செயலி உள்ளது. அன்றாட தேவை என்ற பிரிவில் Blinkit, Zepto செயலிகள் வளர்ந்து வரும் செயலிகளாக உள்ளன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios