வந்துவிட்டது புதிய அப்டேட்! Google Chrome மூலமாகவே பணத்தை மிச்சப்படுத்தலாம்!!

Google Chrome பிரவுசரில் குறைந்த விலையில் பொருட்களை ஆர்டர் செய்யும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் அம்சங்களும், இன்னும் பல வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

New Google Chrome Feature Lets You Track Price Compare Search Results and More

கூகுள் நிறுவனத்தின் சொந்த முயற்சியால் டெவலப் செய்யப்பட்ட பிரவுசர் கூகுள் குரோம் ஆகும். ஒவ்வொரு நாளும் சுமார் 4 பில்லியன் டிவைஸ்களில் கூகுள் குரோம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பயனர்களுக்கு  பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தை வழங்குகிறது. இந்த நிலையில், கூகுள் குரோமில் தற்போது பயனர்களின் வசதிக்கு ஏற்ப சில அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது பணத்தையும் நேரத்தையும் சேமிக்கலாம்:

ஒரே நேரத்தில் பல ஆன்லைன் ஸ்டோர்களில் ஒரு பொருளின் விலையைக் டிராக் செய்யும் வகையில் ‘டிராக் பிரைஸ்’ என்ற அம்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் ஒரு பொருளின் விலை அமேசான், பிளிப்கார்ட் எதிலாவது விலை குறைந்தால் உடனே இமெயில் பெறுவீர்கள், எனவே உங்களுக்கு ஏற்ற விலையில் நீங்கள் வாங்கலாம்.

இதற்கு நீங்கள் பின்வரும் படிநிலைகளைப் பின்பற்றவும்:

  • ஆன்லைன் ஸ்டோருக்குச் சென்று, நீங்கள் ட்ராக் செய்ய விரும்பும் தயாரிப்பை பார்க்கவும்..
  • மேலே Address Bar (முகவரிப் பட்டி) பகுதியில் Track Price என்று இருக்கும். அதை கிளிக் செய்யவும். 
  • பிறகு, மீண்டும் அதில் தோன்றும் Track Price என்பதைக் கிளிக் செய்யவும்.  விலை குறைப்பு, ஆஃபர் தொடர்பான மின்னஞ்சல்கள் இப்போது நீங்கள் உள்நுழைந்துள்ள Google கணக்கிற்குச் செல்லும் வகையில் செட் ஆகிவிடும்.
  • இதே போல் ஒரு தயாரிப்பை டிராக் செய்வதை நிறுத்த, Address Bar பகுதியில் உள்ள Track Price கிளிக் செய்து, பின் Track நீக்கலாம்.
  • நீங்கள் பிரவுசரில் லாகின் செய்திருக்கும் போது மட்டுமே இந்த அம்சம் கிடைக்கும்

New Google Chrome Feature Lets You Track Price Compare Search Results and More

எப்போது வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் உங்கள் பிற பாஸ்வேர்டுகளைப் பார்க்கலாம்:

அட.. இவ்வளவு ஈஸியா Paytm வாலட்டிலிருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றலாமா!

உங்கள் மொபைலில் பிரவுசிங் செய்யும் போது இணையதளங்கள், ஆப்ஸில் எளிதாக லாகின் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் ஏற்கெனவே சேமித்த கடவுச்சொற்களைப் பயன்படுத்தவலாம். இதற்கு Chrome செயலியைப் பதிவிறக்கி, லாகின் செய்து Sync செய்தாலே போதும்.

  • Chrome menu  > Settings  > Turn on sync என்பதைத் தட்டவும்.
  • நீங்கள் பயன்படுத்த விரும்பும் Google கணக்கைத் தேர்வு செய்யவும். பிறகு Yes, I’m in என்பதைத் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் பாஸ்வேர்டுகளைப் பார்க்கலாம், சேர்க்கலாம் அல்லது எடிட் செய்யலாம்:
  • iPhone இல், Chrome மெனு > பாஸ்வேர்டுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Android இல், Chrome மெனு > அமைப்புகள் > பாஸ்வேர்டுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
     
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios