- Home
- Cinema
- 2022 ஆம் ஆண்டு கூகுளில் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த பிடித்த 'புஷ்பா' பட பாடல்..! எந்த பாடல் தெரியுமா?
2022 ஆம் ஆண்டு கூகுளில் டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்த பிடித்த 'புஷ்பா' பட பாடல்..! எந்த பாடல் தெரியுமா?
நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற, பாடல் தான் தற்போது கூகுளில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

இயக்குனர் சுகுமார் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இயக்கிய திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இதுவரை நடித்திராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்த இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஃபஹத் பாசில், ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, சுனில் ராவ் ரமேஷ், தனஞ்சயா, அஜய் கோஷ் அனசுயா பரத்வாஜ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கூலித் தொழிலாளி ஒருவர் எப்படி செம்மரக்கடத்தல் தொழிலாளியாக மாறுகிறார். பின்னர் அந்த கூட்டத்திற்கே, தலைவனாக மாறுகிறார் என்பதை... மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் எழுதி இயக்கி இருந்தார் சுகுமார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகமும் பரபரப்பாக தயாராகி வருகிறது .
பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மீது காவல் நிலையத்தில் இயக்குனர் பரபரப்பு புகார்!
இந்நிலையில், புஷ்பா படத்தில் இடம்பெற்ற.... ஸ்ரீவள்ளி பாடல் கூகுளில் சிறந்த பாடல்களில் டாப் 10 லிஸ்டில், 10 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை கூகுளின் ஹம் டு சர்ச் வெளியிட்டுள்ளது. ஸ்ரீ வள்ளி பாடலில் மிகவும் எதார்த்தமான, அல்லு அர்ஜுனின் வித்தியாசமான நடன அசைவுகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை, தமிழ், தெலுங்கு. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். ஹிந்தியில் ஜாவித் அலி பாடி இருந்தார். இவர் பாடிய இந்த பாடல் தான் தற்போது டாப் 10 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அலி சேத்தியின் பசூரி பாடல் முதலிடத்தில் உள்ளது. ஆனால் தென்னிந்திய மொழியில் அதிகம் தேடப்பட்டும், பார்க்கப்பட்ட பாடலாக உள்ளது ஸ்ரீவள்ளி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Chilla Chilla song Leaked: ஆன்லைனில் லீக்கான 'சில்லா சில்லா' பாடல்! அதிர்ச்சியில் துணிவு படக்குழு!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.