OTTயில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 தமிழ் கேங்ஸ்டர் மூவீஸ் இதோ
'டாக்ஸிக்' படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அதற்கு முன் ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 தமிழ் கேங்ஸ்டர் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 5 Tamil Gangster Movies On OTT
பான் இந்தியா நட்சத்திரமான யாஷ் நாயகனாக நடித்த கேங்ஸ்டர் படமான 'டாக்ஸிக்' ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். நீண்ட நாட்களாக இதன் ரிலீஸுக்காக காத்திருந்தனர். 'டாக்ஸிக்' படத்திற்காக ரசிகர்கள் ஜூன் வரை காத்திருக்க வேண்டும். சரி, 'டாக்ஸிக்' இல்லையென்றால் என்ன, ஓடிடியில் சிறந்த கேங்ஸ்டர் படங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விக்ரம் வேதா
2017ல் வந்த மாதவன்-விஜய் சேதுபதியின் 'விக்ரம் வேதா' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. ஒரு போலீஸ்காரர் ஒரு ரவுடியை தேடுவதே கதை. IMDb-ல் 8.2 ரேட்டிங் பெற்றது. ஜீ5, ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைமில் இப்படத்தை பார்க்கலாம். இப்படத்தை புஷ்கர் - காயத்ரி ஜோடி இயக்கி இருந்தனர்.
புதுப்பேட்டை
தனுஷ் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த படம் 'புதுப்பேட்டை'. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் கதை மிக அருமையானது. வீட்டை விட்டு ஓடி, ஒரு கும்பலில் சேர்ந்து குற்ற உலகில் தனுஷ் எப்படி வளர்கிறார் என்பதே கதை. IMDb-ல் 8.4 ரேட்டிங் பெற்றது. அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
ஆரண்ய காண்டம்
2010ல் வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' படத்தில் ஜாக்கி ஷெராஃப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வயதான ஒரு டானை சுற்றி கதை நகர்கிறது. IMDb-ல் 8.4 ரேட்டிங் பெற்றது. அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இப்படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார்.
கைதி
கார்த்தியின் 'கைதி' திரைப்படம் சிறையிலிருந்து வெளிவந்த பின் மகளைக் காண விரும்பும் ஒருவரின் கதை. 2019ல் வந்த இப்படத்தில் ஆக்ஷன் த்ரில்லர் அதிகம். IMDb-ல் 8.4 ரேட்டிங் பெற்றது. ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைமில் பார்க்கலாம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.
போக்கிரி
பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த 'போக்கிரி' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தது. இது ஒரு மாபெரும் கேங்ஸ்டர் டிராமா. IMDb-ல் 8 ரேட்டிங் பெற்றது. இப்படம் அமேசான் பிரைமில் பார்க்கலாம். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

