MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • RB Choudary : விஜய்யால் கடைசி வரை நிறைவேறாமல் போன ஆர்.பி.செளத்ரியின் நீண்டநாள் ஆசை..!

RB Choudary : விஜய்யால் கடைசி வரை நிறைவேறாமல் போன ஆர்.பி.செளத்ரியின் நீண்டநாள் ஆசை..!

Producer RB Choudary : தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி விபத்தில் சிக்கி மரணம் அடைந்த நிலையில், நிறைவேறாமல் போன அவரின் நீண்ட நாள் ஆசை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 06 2026, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Producer RB Choudary death
Image Credit : X

Producer RB Choudary death

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' பேனரில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி. சௌத்ரி. இவர் ராஜஸ்தான் மாநிலம், பேவார் மாவட்டத்தில் உள்ள ஜூன்டா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 76. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜூன்டா கிராமம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. காரை ஓட்டி வந்த கௌதம் சேர்வி படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக ஜோத்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25
விபத்தில் மரணமடைந்த ஆர்.பி. செளத்ரி
Image Credit : #RBChoudary X Page

விபத்தில் மரணமடைந்த ஆர்.பி. செளத்ரி

தகவல்படி, ஆர்.பி. சௌத்ரி லிலம்பா கிராமத்தில் நடந்த தனது உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டு, தனது மருமகனுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். ஜூன்டா கிராமம் அருகே வந்தபோது, திடீரென சாலையில் மாடுகள் குறுக்கே வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவரில் மோதியது. இந்த மோதலில் ஆர்.பி. சௌத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Articles

Related image1
கதை பிடிச்சும் நடிக்க முடியல.. ஜீவா தவறவிட்ட பிளாக்பஸ்டர் படங்கள் - லிஸ்ட்டை பார்த்து ஷாக் ஆகாதீங்க!
Related image2
RB Choudary: பூவே உனக்காக பட தயாரிப்பாளரும், ஜீவாவின் தந்தையுமான ஆர் பி சௌத்ரி வாகன விபத்தில் உயிரிழப்பு!
35
ஆர்.பி. செளத்ரி 40 ஆண்டு திரைப்பயணம்
Image Credit : #RBChoudary X Page

ஆர்.பி. செளத்ரி 40 ஆண்டு திரைப்பயணம்

அவரது உடல் இறுதிச் சடங்குகள் சென்னையில் நடைபெறுகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்புத் துறையில் இருந்த இவர், 'நாட்டாமை', 'கோகுலம்', 'சூர்யவம்சம்' உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்துள்ளார். சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவான 'மாரீசன்' தான் இவர் தயாரித்த கடைசிப் படம். இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படம், 2025 ஜூலையில் வெளியானது.

45
ஆர்.பி. செளத்ரியின் ஆசை
Image Credit : #RBChoudary X Page

ஆர்.பி. செளத்ரியின் ஆசை

தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி இதுவரை 99 படங்களை தன்னுடைய சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். அவரின் 100வது படத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஆர்.பி.செளத்ரி. இதனால் விஜய்யின் கால்ஷீட்டுக்காக கடந்த சில ஆண்டுகளாக காத்திருந்தார் ஆர்.பி. செளத்ரி. ஆனால் விஜய் திடீரென சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துவிட்டதால், அவர் ஆர்.பி. செளத்ரியின் தயாரிப்பில் நடிக்க முடியாமல் போனது. இதனால் விஜய்யை தன்னுடைய தயாரிப்பில் வரும் 100வது படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற ஆர்.பி. செளத்ரியின் கனவு நிறைவேறாமலேயே அவர் மறைந்துவிட்டார்.

55
கதறி அழுத ஜீவா
Image Credit : #RBChoudary X Page

கதறி அழுத ஜீவா

ஆர்.பி. செளத்ரியின் மகன்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் இருவருமே சினிமாவில் நாயகர்களாக நடித்து வருகிறார்கள். இதில் ஜீவா, பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தார். மகன் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெற்றிபெற்றதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார் ஆர்.பி. செளத்ரி, தந்தையின் மறைவால் நடிகர் ஜீவா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். தந்தையின் மறைவை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : மெமரி லாஸ் ஆன மாதிரி நடித்தாரா ஈஸ்வரி? எல்லா உண்மையையும் போட்டுடைத்த ஜனனி
Recommended image2
Siragadikka Aasai : பிரியும் விஜயா - அண்ணாமலை; வீடு ஜப்தி செய்யப்படும் முன் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்
Recommended image3
RB Choudary: பூவே உனக்காக பட தயாரிப்பாளரும், ஜீவாவின் தந்தையுமான ஆர் பி சௌத்ரி வாகன விபத்தில் உயிரிழப்பு!
Related Stories
Recommended image1
கதை பிடிச்சும் நடிக்க முடியல.. ஜீவா தவறவிட்ட பிளாக்பஸ்டர் படங்கள் - லிஸ்ட்டை பார்த்து ஷாக் ஆகாதீங்க!
Recommended image2
RB Choudary: பூவே உனக்காக பட தயாரிப்பாளரும், ஜீவாவின் தந்தையுமான ஆர் பி சௌத்ரி வாகன விபத்தில் உயிரிழப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved