MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மீது காவல் நிலையத்தில் இயக்குனர் பரபரப்பு புகார்!

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மீது காவல் நிலையத்தில் இயக்குனர் பரபரப்பு புகார்!

இயக்குனர் சச்சின் என்பவர், பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே மீது காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 07 2022, 04:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்த பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே.  குறிப்பாக தமிழில் இவர் முண்டாசுக் கவிஞன், பாரதியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் பாரதியாராக நடித்த தமிழக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். மேலும் பாரதியாரின் கதாபாத்திரத்தை தத்ரூபமாக கண் முன் நிறுத்தினார் என இவரை பலர் பாராட்டினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பாரதி படத்திற்கு பின், தமிழில் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில்,  அஜித் நடித்த 'பூவெல்லாம் உன் வாசம்', ரஜினிகாந்த் நடித்த 'பாபா' விக்ரமுடன் 'தூள்', தனுஷுடன் 'படிக்காதவன்', விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' போன்ற போன்ற பல படங்களில் நடித்துள்ளார் சாயாஜி ஷிண்டே. இந்நிலையில் இவர் மீது தற்போது இயக்குனர் சச்சின் என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் திரையுலகினர்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

என் மகனுக்கு பிடித்த பெண்ணை இவர் தான் தேர்வு செய்யணும்? சிம்பு திருமணம் குறித்து டி.ராஜேந்தர் பேட்டி!

35

இயக்குனர் சச்சின் எடுக்க இருந்த படத்தில், சாயாஜி ஷிண்டே.. முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதற்காக 5 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னர் இதற்கான முழு தொகையும் அவரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், திடீர் என சாயாஜி ஷிண்டே திரைக்கதையில் தன்னுடைய கதாபாத்திரத்தை மாற்றக் கோரி இயக்குனர் சச்சினிடம் கூறியுள்ளார்.

45

அப்படி இல்லை என்றால் இந்த படத்தை விட்டு விலகுவதாகவும், இந்த படத்திற்காக பெற்ற 5 லட்சம் ரூபாயை திருப்பி கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சச்சின் வேறு ஒரு நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்க தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சாயாஜி ஷிண்டே இந்த படத்திற்காக பெற்ற ஐந்து லட்ச ரூபாயை திருப்பி தருவதாக கூறியும் கொடுக்கவில்லை. பல முறை அவரை அணுகி 5 லட்சம் ரூபாயை கொடுக்க சொல்லி கேட்டும் கொடுக்காததால், தற்போது காவல் நிலையத்தை நாடியுள்ளார் சச்சின்.

அடிதூள்... சொந்த ஊரில் மிக பிரமாண்டமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்த விஜய் டிவி ராமர்! வைரலாகும் போட்டோஸ்!

55

மேலும் தற்போது 5 லட்சம் பணத்தை பெற்று தந்தால் மட்டும் போதாது, சாயாஜி ஷிண்டேவால் ஏற்பட்ட இழப்புக்காக கூடுதலாக 17 லட்சம் அவர் கொடுக்க வேண்டும் என்றும், மொத்தம் 22 லட்சம் ரூபாய் அவர் தனக்கு தர வேண்டும் என காவல் நிலையத்தில் இயக்குனர் சச்சின் கொடுத்துள்ள புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகார் குறித்து தற்போது போலீசார் இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

அட்ராசக்க... தளபதி 67 படத்தில் இரண்டு ஹீரோயின்கள்..! விஷால் இடத்தை பிடித்த முன்னணி நடிகர்..யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Recommended image2
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!
Recommended image3
Top 10 Tamil Serial : TRP ரேஸில் அய்யனார் துணை சீரியலை அடிச்சு தூக்கிய சின்ன மருமகள் - இந்த வார டாப் 10 லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved