அட்ராசக்க... தளபதி 67 படத்தில் இரண்டு ஹீரோயின்கள்..! விஷால் இடத்தை பிடித்த முன்னணி நடிகர்..யார் தெரியுமா?
தளபதி விஜய்யின் 67வது படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் மற்றும் முக்கிய வில்லன் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் தற்போது 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 67' படத்தில் நடிக்க உள்ளார்.
தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'மாஸ்டர்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Yashoda OTT Release: ஓடிடியில் வெளியாகும் சமந்தாவின் 'யசோதா'..! வெளியான ரிலீஸ் தேதி.!
இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில், முதல் கட்டமாக இந்த படத்தின் டீசர் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், படப்பிடிப்பு அன்று டீசரை வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக படப்பிடிப்பு முடிந்த பின்னர், அந்த படத்தின் பூஜையின் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். ஆனால் தற்போது வரை தளபதி 67 படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தின் பூஜையில் தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ், உள்ளிட்ட இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள வில்லன் நடிகர் யார் என்கிற தகவலும் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் நடிகை திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் விஷாலுக்கு பதில் 'தளபதி 67' படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. மேலும் சாண்டி மாஸ்டரும் இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுவதால், இந்த படத்திற்கு சாண்டி மாஸ்டர் நடன அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷாலிடம் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ளதாகவும், இவருடைய கதாபாத்திரம் விஜய்க்கு நிகரான வில்லன் கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதே போல் விஜய்க்கு ஹீரோயினாக த்ரிஷாவும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்தும் நடித்த உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலே அல்லது ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலோ ஆரம்பமாகும் என பரவலாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது குறிபிடத்தக்கது.