நடிகை சமந்தா நடிப்பில் கடந்த மாதம் வெளியான 'யசோதா' திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா தற்போது மயோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 11 ஆம் தேதி, சமந்தா நடிப்பில் உருவான 'யசோதா' திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விவாகரத்துக்கு பின்னர் சமந்தா, நயன்தாரா பாணியில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தா நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சக்க போடு போட்டது. இதுவரை திரையுலகில் சொல்லப்படாத கதையான, வாடகை தாய் விவகாரத்தில் நடக்கும் மருத்துவ முறைகேடு குறித்து மிகவும் துணிச்சலோடு இந்த படத்தில் பேசப்பட்டது.

இது மிகவும் சர்ச்சையான கதை என்பதால், இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது 'யசோதா' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 9 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமந்தாவின் யசோதா படத்தை திரையரங்கில் பார்க்காமல் மிஸ் செய்தவர்கள் கண்டிப்பாக ஓடிடியில் பார்த்து ரசிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
