சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறேன்! என் நிலைமைக்கு வடிவேலு தான் காரணம்..? காமெடி நடிகை பிரேமா பிரியா பரபரப்பு பேட்டி
பட வாய்ப்பு இல்லாமல் தான் கஷ்டப்படுவதற்கு காரணம், நடிகர் வடிவேலு தான் என பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா கண் கலங்கியபடி கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த 10 ஆண்டுகளாக நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று முரண்டுபிடித்ததாலும், ரெட் கார்டு போடப்பட்டதாலும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் மீதான ரெட் கார்டு நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் கதாநாயகனாகவும், சில படங்களில் காமெடி வேடத்திலும் நடித்து வருகிறார். வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பின் கதையின் நாயகனாக நடித்துள்ள 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம், டிசம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் படுத்துகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் வடிவேலு நடித்த பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள, நடிகை பிரேமா பிரியா தன்னுடைய பட வாய்ப்புகள் நழுவி போனதற்கு வடிவேலுவுடன் சண்டை போட்டது தான் காரணம் என கூறியுள்ளார்.
நடிகை பிரேமா பிரியா பல படங்களில் குணச்சித்திர வேதத்திலும், காமெடி வேடத்திலும் நடித்து மிகவும் பிரபலமானவர். குறிப்பாக ஏ பி சி டி, பம்பரக் கண்ணாலே, இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்.
இவருடைய கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்துவிட்டார். கணவர் இருந்த வரை எந்த ஒரு கஷ்டத்தையும் எதிர்கொள்ளாமல் இருந்த இவருக்கு, இது மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது. தற்போது தன்னுடைய மகள் படிப்பிற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் நடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்பந்தத்தில் வாய்ப்பு தேடி வரும் இவர் வடிவேலுவால் தன்னுடைய பட வாய்ப்புகளை இழந்தது குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர் வடிவேலு தளபதி விஜயுடன் காமெடியில் கலக்கிய 'சுறா' படத்தில், பிரேமா பிரியா வடிவேலுவுடன் ஒரு காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் வடிவேலு அவரை மாற்றி விட்டு, வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை இவர் கண்டமேனிக்கு திட்டு விட்டாராம்.
அதாவது, வடிவேலுவிடம் பிரேமா பிரியாவை அறிமுகம் செய்து வைத்த ஆர்டிஸ்டுக்கும், வடிவேலுவுக்கும் இடையே உள்ள பிரச்சனையை காரணம் காட்டி, இவருக்கு வந்த பட வாய்ப்புகளையும் தடுத்ததாகவும் இதனால், ஏவிஎம் ஸ்டுடியோவில் வடிவேலுவிடம் நான் பிரச்சனை செய்ததை அனைவருமே பார்த்தனர். மீண்டும் நான் வடிவேலுவை பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.
கணவர் மரணத்தை தொடர்ந்து, மீண்டும் பட வாய்ப்புகளை தேட துவங்கியுள்ள இவர்... தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இவர் கொடுத்துள்ள இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.