- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Karthik Uncovers The Truth About The Astrologer in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் ஜோதிடரின் முகத்திரையை கிழித்து கார்த்திக் உண்மையை நிரூபித்து காட்டியுள்ளார்.

ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்
கார்த்திகை தீபம் சீரியலில் தனது வயிற்றில் வளரும் குழந்தை எப்படி இருக்கும் என்று ரோகிணி தனக்கு தானே கேட்டுக் கொண்டார். அதில் இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று எமோஷனலாக பேசினார். வாய், கண், மூக்கு, காது எப்படி இருக்கும் என்றெல்லாம் பேசினார். அதன் பின்னர் ஐ லவ் யூ என்று எழுதப்பட்டிருந்த குழந்தயின் புகைப்படத்தில் ஐ மிஸ் யூ என்று எழுதி வைத்துவிட்டு கோயிலுக்கு செல்கிறேன் என்று ரேவதியிடம் கூறிவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். அவருக்கு கரு கலைப்பு செய்யப்படுமா இல்லையா என்பது பற்றி அடுத்தடுத்த எபிசோடிகளில் தெரியவரும்.
சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்
இது ஒரு புறம் இருக்க, சந்திரகலாவால் வீட்டில் சண்டை வந்தது. அப்போது ராஜராஜன் சந்திரகலாவை அதட்ட சைலண்டானார். பின்னர், கார்த்திக் ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி, அனைவரும் ஜோதிடரின் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்து ஒரு பெண்ணை வர வழைத்து, ரோகிணியின் ஜாதகத்தில் பவானி என்று எழுதி அதனை அந்த பெண்ணிடம் கொடுத்து, இந்த ஜாதகருக்கு பிறக்கும் குழந்தையின் நேரம் எப்படி இருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கா என்றெல்லாம் கேட்க வேண்டும் என்றார்.
கார்த்திகை தீபம் ரோகிணி கருக்கலைப்பு
அதன்படியும் அந்த பெண்மணி கேட்டார். இதையெல்லாம் வீட்டிற்கு வெளியில் மறைந்து நின்று கொண்டு அனைவரும் பார்த்தனர். அப்போது குழந்தை பிறக்கும் நேரம் ராஜயோகத்தை தரும். குழந்தையின் அம்மாவிற்கு நல்ல நேரம் ஆரம்பமாகும். குழந்தையின் பாட்டி, 100 வயது வரை நன்கு ஆரோக்கியமாக இருப்பார் என்று கூறவே, சந்திரகலா அதிர்ச்சி அடைந்தார். அதோடு, சாமுண்டீஸ்வரி சந்தோஷமடைந்தார். மேலும், குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்று ஆனந்தம் கொண்டார்.
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்
இதற்கிடையில் அத்தை உங்களுக்கு நடந்த கார் விபத்து தானாக நடந்தது இல்லை. அது ஒரு பிளான் தான். சிவனாண்டி தான் அப்படியொரு பிளான் பண்ணிருப்பார் என்று எனக்கு தோன்றுகிறது. குழந்தையின் கருவை கலைக்க, உங்களது உயிருக்கு ஆபத்து இருப்பது போன்று காண்பிக்கவே இப்படியோரு டிராமா நடத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது என்றார். கார்த்திக் அப்படி கூறவே சந்திரகலாவிற்கு ஷாக் மேல ஷாக் வந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.