MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!

வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!

Rohini Emotional Speech About Unborn Baby Twist in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் ரோகிணி வயிற்றில் இருக்கும் குழந்தையை நினைத்து ஃபீல் பண்ணும் காட்சி ரசிகர்களை கண் கலங்க செய்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 24 2026, 10:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial Today Episode

கார்த்திகை தீபம் சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு கர்ப்பமான ரோகிணி தனது குழந்தையை நி்னைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான், குழந்தையால் சாமுண்டீஸ்வரியின் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் சொன்னதாக சந்திரகலா டிராமா ஆடினார். கடைசி வரை இது தான் உண்மை என்று நம்ப வைத்தார். அப்போது கார்த்திக் ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி, ராஜராஜனும் போன் போட்டு ஜோதிடரை வர வைத்து ரோகிணியின் ஜாதகத்தை பார்த்தனர். அதில், உங்களது பெரிய பொண்ணுக்கு குழந்தை பிறந்தால் உங்களது உயிருக்கு ஆபத்து என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். 

25
Rohini emotional scene baby
Image Credit : Zee Tamil You Tube

Rohini emotional scene baby

இதில் துளி கூட நம்பிக்கை இல்லாத கார்த்திக் நேராக ஜோதிடரின் வீட்டிற்கு சென்ற கார்த்திக் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பினார். ஆனாலும், ஜோதிடரும் தான் சொன்னது உண்மை தான் உண்மை தான் என்றார். அப்போதும் சந்தேகத்துடன் கார்த்திக் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். உண்மையில் ரோகிணிக்கு குழந்தை பிறந்தால் பிரிந்திருந்த ரெண்டு குடும்பமும் ஒன்று சேர்ந்துவிடும் என்று தெரிந்து கொண்ட சந்திரகலா இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றினார். தனது நாடகத்தை உண்மை என்று நம்ப வைக்க கார் விபத்துக்கும் ஏற்பாடு செய்தார்.

35
கார்த்திகை தீபம் ரோகிணி கருக்கலைப்பு
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் ரோகிணி கருக்கலைப்பு

அதன்படி சந்திரகலா மற்றும் சாமுண்டீஸ்வரி இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது சிவனாண்டி ஏற்பாடு செய்து வைத்த கார் டிரைவர் கச்சிதமாக இந்த வேலையை செய்து முடித்தார். மேலும், சந்திரகலா எதிர்பார்த்தபடி சாமுண்டீஸ்வரிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனைக்கு சென்று தலையில் கட்டு போட்டு வீட்டிற்கு வந்தனர். எல்லோரும் என்னாச்சு என்னாச்சு என்று கேட்க, எல்லாம் உன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தையால் தான் என்று சந்திரகலா தனது நாடகத்தை தொடங்கினார்.

45
ரோகிணி உருக்கமான பேச்சு
Image Credit : Zee Tamil You Tube

ரோகிணி உருக்கமான பேச்சு

ஜோதிடர் தான் சொன்னாரே, உனக்கு பிறக்கும் குழந்தையால் தான் அக்காவின் உயிருக்கு ஆபத்து. இதுவே நானாக இருந்தால் இந்த நேரம் என்னுடைய குழந்தையின் கருவை கலைத்திருப்பேன். எனக்கு இவ, அக்கா கிடையாது ஒரு அம்மா. அதனால் தான் என்னுடைய புருஷனையும் விட்டு விட்டு நான் அக்காவோடு இருக்கிறேன் என்றார்.

55
Karthigai Deepam Serial
Image Credit : Zee Tamil You Tube

Karthigai Deepam Serial

இந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர் காலில் விழுந்து எப்படியோ குழந்தையின் கருவை கலைக்க சம்மதம் வாங்கினார். மருத்துவரும் மறுநாள் காலையில் வர சொல்லவே, குழந்தையின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு வயிற்றில் இருக்கும் குழந்தையின் வாய், கண், மூக்கு, காது எப்படி இருக்கும் என்று பேசி, உன்னை பார்க்கவே முடியாதா? என்றெல்லாம் பேசினார். பின்னர் ஐ லவ் யூ என்று குழந்தையின் போட்டோவில் எழுதப்பட்டியிருந்த நிலையில் ஐ மிஸ் யூ என்று திருத்தி எழுதி வீட்டில் கோயிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சினிமா
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
போடா டோமர் தலையா... நிலாவின் மெசேஜால் அப்செட் ஆன ராகவ் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved