- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ராகவ்வை கதற கதற அடித்த சோழன்... நிலாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
ராகவ்வை கதற கதற அடித்த சோழன்... நிலாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
அய்யனார் துணை சீரியலில் சோழனிடம் வேலை போன விஷயம் பற்றி கூறிய நிலா, ராகவ் தன்னிடம் தரக்குறைவாக பேசியதால் இந்த முடிவு எடுத்ததாக சொல்லி இருந்தார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Ayyanar Thunai Serial Today Episode
அய்யனார் துணை சீரியலில் ராகவ், நிலாவை தனியாக அழைத்து அவர் வெளியே வேலை தேடிக் கொண்டிருக்கும் விஷயம் பற்றி கேட்ட நிலையில், அவரும் உங்களால் தான் இந்த முடிவை எடுத்ததாக சொல்கிறார். உடனே நீ இங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல அதனால் உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் சான்றிதழ் கிடைக்காது என்று ராகவ் சொல்ல, என்கிட்ட திறமை இருக்கு அதைவைத்து நான் எங்கு சென்று வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்வேன் என சொன்னதோடு, உடனடியாக ஐடி கார்டை கழட்டி கொடுத்துவிட்டு கிளம்புகிறார் நிலா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சோழனிடம் அடிவாங்கிய ராகவ்
வேலையை தூக்கியெறிந்த விஷயத்தை சோழனிடம் சொல்லி ஃபீல் பண்ணிய நிலா, ராகவ் தன்னிடம் மோசமாக நடந்துகொண்ட விஷயத்தையும் சொல்லி புலம்ப, இறுதியில், இதற்காக நீங்க அவன்கிட்ட போய் சண்டைபோட்டீங்கனா அவ்வளவுதான் என எச்சரித்திருந்தார். ஆனால் சோழன், நிலாவின் உத்தரவையும் மீறி ராகவ்விடம் சென்று அவரின் காரில் வைத்து ராகவ்வை அடி வெளுத்திருக்கிறார். ரத்தம் வரும் அளவுக்கு ராகவ்வை அடித்திருக்கிறார் சோழன். நிலாவின் பேச்சை மீறி ராகவ்விடம் போய் சோழன் சண்டைபோட்டு உள்ளதால், பிரச்சனை பெரிதாக வெடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
கல்யாணத்தை நிறுத்திய சேரன்
மறுபுறம் சேரன், சந்தாவின் வீட்டுக்கு சென்று பேசுகிறார். அப்போது தனக்கு தற்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என கூறுகிறார். நிலாவும், சோழனும் கல்யாணம் ஆகி இன்னும் சேர்ந்து வாழவில்லை. இப்போ நான் கல்யாணம் பண்ணிகிட்டா நிலா வீட்டை விட்டு போயிடுவாங்க. அதனால அவங்க ரெண்டு பேரும் சேர்ந்ததுக்கு அப்புறம் தான் கல்யாணம் பண்ணனும்னு நான் இருக்கேன். அதுவரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என ஒரு குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார் சேரன். இதையடுத்து சந்தாவும், அவரின் அண்ணன் அனீஸும் காத்திருக்கிறோம் என சேரனுக்கு உறுதியளித்துள்ளார்கள்.
கல்யாண பேச்சை எடுக்கும் நிலா
இதையடுத்து இரவு வீட்டில் எல்லோருமே அமர்ந்திருக்கும் போது சேரனின் கல்யாணம் பற்றி பேச முடிவெடுக்கிறார் நிலா. இதற்காக வெளியில் இருந்த தன்னுடைய மாமனார் நடேசனை அழைத்து உள்ளே வரச் சொல்கிறார். உள்ளே சென்று சேரனின் கல்யாணம் பற்றி பேசுகிறார்கள். அதற்கு சேரன், இப்போதைக்கு நான் கல்யாணம் பண்ண மாட்டேன். சந்தா வீட்டில் நிறைய பிரச்சனை இருக்கு. அவளோட அப்பா - அம்மா சம்மதிக்கணும், அவங்க பீகார்ல இருக்காங்க என சாக்குபோக்கு சொல்லி கல்யாணத்தை தள்ளிப் போட பார்க்கிறார் சேரன்.
சம்மதிக்க மறுக்கும் சேரன்
இதன்பின்னர் பேசும் நடேசன், ஏண்டா எந்த வீட்ல தான் பிரச்சனை இல்ல. நம்ம வீட்டுலயே எவ்ளோ பிரச்சனை இருக்குன்னு வெளிய பேசிக்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் மீறி தான் கல்யாணம் பண்ணனும். இதெல்லாம் ஒரு பிரச்சனைனு சொல்லிக்கிட்டு இருக்க. அவங்க அப்பா - அம்மாகிட்ட அப்புறம் பேசிக்கலாம். முதலில் கல்யாணம் பண்ணிக்கோ என சேரனை பிரையின் வாஷ் பண்ணுகிறார். ஆனால் சேரனோ அதற்கு செவிசாய்க்கவில்லை. இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

