2022-ல் தமிழ்நாட்டில் மட்டும் கோடி கோடியாய் வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள் - முழு லிஸ்ட் இதோ
2022-ம் ஆண்டு ரிலீசான படங்களில் தமிழ்நாட்டில் மட்டும் கோடி கோடியாய் வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
1. பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீசான பொன்னியின் செல்வன் தான் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.225 கோடி வசூலித்துள்ளது.
2. விக்ரம்
லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்த பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.183 கோடி வசூலித்து இருந்தது.
3. வலிமை
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.118 கோடி வசூலித்தது.
4. கே.ஜி.எஃப் 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.115 கோடி வசூலித்து இருந்தது.
5. பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கல்லாகட்டியது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.113 கோடி வசூலித்தது.
6. டான்
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இந்த லிஸ்ட்டில் 6-வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.85 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
7. ஆர்.ஆர்.ஆர்
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி பிரம்மண்ட வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.82 கோடி வசூலித்து இருந்தது.
8. திருச்சிற்றம்பலம்
தனுஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கி இருந்தார். இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.65 கோடிக்கு மேல் வசூலித்தது.
9. லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் இந்த பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது.
10. சர்தார்
கார்த்தியின் சர்தார் திரைப்படம் தான் இந்த லிஸ்ட்டில் 10-வது இடத்தில் உள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.