2022-ல் பிரம்மாண்ட வெற்றிப்படங்களை கொடுத்து... பாக்ஸ் ஆபிஸ் குயினாக வலம் வந்த நடிகைகள் லிஸ்ட் இதோ
2022-ம் ஆண்டு கதாநாயகிகளை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி வெற்றி வாகை சூடி உள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு அதிக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களை கொடுத்த நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு இந்த ஆண்டு ஸ்பெஷலான ஒன்றாகவே அமைந்துள்ளது. அவருக்கு திருமணம் ஆனதும் இந்த ஆண்டு தான், குழந்தை பிறந்ததும் இந்த ஆண்டு தான். அதேபோல் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளியதும் அவர் நடித்த படங்கள் தான். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர். பிரம்மாஸ்திரா, கங்குபாய் கத்தியவாடி, டார்லிங்ஸ் ஆகிய படங்கள் வெற்றிபெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸ் குயின் லிஸ்ட்டில் ஆலியா பட் தான் முதலிடம் பிடித்துள்ளார்.
ஸ்ரீநிதி ஷெட்டி
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இளம் நடிகையாக இருந்தாலும் அவர் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் அவரை இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்க வைத்துள்ளது. இதுதவிர அவர் விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்திருக்கிறார். அப்படம் தோல்வி படமாக இருந்தாலும் கேஜிஎஃப் 2 அவருக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தபு
பாக்ஸ் ஆபிஸ் குயின் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளவர் தபு. இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான புல் புலையா 2 மற்றும் திரிஷ்யம் 2 ஆகிய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடின. குறிப்பாக கடந்த மாதம் வெளிவந்த திரிஷ்யம் 2 திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! தகதகவென மின்னும் உடையில்... தங்கமாய் ஜொலிக்கும் காஜல் அகர்வால்! போட்டோஸ்.!
திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்
நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் நான்காம் இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஏனெனில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் திரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும் நடித்திருந்தார்.
சமந்தா
நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும், பாக்ஸ் ஆபிஸ் குயின் லிஸ்ட்டில் அவர் 5-வது இடத்தை பிடித்துள்ளார். சமந்தா நடிப்பில் இந்த ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் யசோதா ஆகிய இரண்டு படங்கள் ரிலீசாகின. இந்த இரண்டு படங்கலும் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தன.
இதையும் படியுங்கள்... அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்