அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 2 படங்கள்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்
கைவசம் டஜன் கணக்கிலான படங்களை வைத்துக்கொண்டு படு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீசாக உள்ளன.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் தனுஷ் தயாரித்த காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் பாப்புலர் ஆன இவர், தற்போது அதிகளவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் கைவசம் டிரைவர் ஜமுனா, கண்ணன் இயக்கியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, விஷ்ணு விஷாலின் மோகன் தாஸ், இடம் பொருள் ஏவல், இந்தியில் மாணிக், மலையாளத்தில் ஹெர், புலிமாடா மற்றும் அஜயண்டே ரண்டம் மோஷனம் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... பதான் பட பாடல் சர்ச்சை! ஷாருக்கானை நேர்ல பார்த்தா உயிரோடு எரிச்சி கொன்றுவேன் - அயோத்தி துறவி ஆவேசம்
இதில் இரண்டு படங்கள் தான் தற்போது அடுத்தடுத்த நாளில் ரிலீசாக உள்ளன. அதன்படி கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 29-ந் தேதி ரிலீசாக உள்ளது. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
இதற்கு அடுத்த நாள், அதாவது வருகிற டிசம்பர் 30-ந் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் சமந்தாவின் யசோதா படத்துக்கு போட்டியாக ரிலீசாக இருந்த இப்படம் போதிய தியேட்டர் கிடைக்காத காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய்யின் குட்டிக் கதை கேட்க ரெடியா... பரபரக்கும் வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் வேலைகள் - வைரலாகும் வீடியோ