விஜய்யின் குட்டிக் கதை கேட்க ரெடியா... பரபரக்கும் வாரிசு படத்தின் ஆடியோ லாஞ்ச் வேலைகள் - வைரலாகும் வீடியோ
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விஜய்யின் நடித்துள்ள படம் ரிலீசாகப்போகிறது என்றால், அப்படத்தின் ஆடியோ லாஞ்ச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் அதில் அவர் பேசும் அரசியல் பேச்சுகளும், அவர் சொல்லும் குட்டி ஸ்டோரியையும் கேட்பதற்கென தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கிறது. ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை.
ஏனெனில் அப்படம் ரிலீசான சமயத்தில் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாகவும், இசை வெளியீட்டு விழா நடத்தினால் ரசிகர்களுக்கு நோய் பரவும் அபாயம் இருந்தனாலும் அப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம் என விஜய்யே சொல்லிவிட்டார். இருப்பினும் இயக்குனர் நெல்சன் உடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று நடத்தி இருந்தனர்.
இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் அம்மா சென்டிமெண்ட் பாடலை அடிச்சுதூக்க வருகிறது ‘கேங்ஸ்டா’.. துணிவு 3-வது சிங்கிள் அப்டேட் இதோ
கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் விஜய். அதன்பின் இரண்டு ஆண்டுகளாக எந்தவித படவிழாக்களிலும் தலைகாட்டாமல் இருந்து வந்த அவர், வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ள வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேச இருக்கிறார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த விழாவுக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... தளபதி விஜய் விழியகம்... விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கண் தான செயலி அறிமுகம்