காந்தாரா முதல் லவ் டுடே வரை... கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் ஒரு பார்வை
2022 தென்னிந்திய திரையுலகிற்கு மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு ஏராளமான பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி கண்டன. அதேவேளையில், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்த படங்களும் இந்த ஆண்டு வெளியாகி இருந்தன. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. காந்தாரா
கன்னட திரைப்படமான காந்தாரா தான் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இப்படம் வெறும் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்தது.
2. காஷ்மீர் பைல்ஸ்
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரிலீசான இந்தி படம் தான் தி காஷ்மீர் பைல்ஸ். வெறும் 17 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பர்ட்டிருந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.340 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
3. 777 சார்லி
ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான கன்னட திரைப்படமான சார்லியும் இந்த ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களுள் ஒன்றி. வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருந்தது.
4. கார்த்திகேயா 2
தெலுங்கில் ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கார்த்திகேயா 2. பேண்டஸி திரைப்படமான இது பாக்ஸ் ஆபிஸில் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. குறிப்பாக இதன் இந்தி பதிப்பு மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.
5. திருச்சிற்றம்பலம்
மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீசானது. வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.110 கோடிக்கு மேல் வசூலித்தது.
இதையும் படியுங்கள்... கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 100 ஆசிய பிரபலங்கள் பட்டியல் வெளியீடு... ‘தல’ தோனியை மிஞ்சிய விஜய்
6. சர்தார்
கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான திரைப்படம் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படம் வெறும் ரூ.20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
7. சீதா ராமம்
துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சீதா ராமம். வெறும் ரூ.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.90 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
8. லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. ஏஜிஎஸ் நிறுவனம் வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.85 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... வாரிசை மிஞ்சிய துணிவு..! இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்!