MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 100 ஆசிய பிரபலங்கள் பட்டியல் வெளியீடு... ‘தல’ தோனியை மிஞ்சிய விஜய்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 100 ஆசிய பிரபலங்கள் பட்டியல் வெளியீடு... ‘தல’ தோனியை மிஞ்சிய விஜய்

2022-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 100 ஆசிய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Dec 20 2022, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 100 ஆசிய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பிரபலங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

23

இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களை தென் கொரியாவின் பிரபல இசைக்குழுவை சேர்ந்த பாடகர்களான வி மற்றும் ஜங்க்கூக் ஆகியோர் பிடித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிங் கோலி பிடித்துள்ளார். வழக்கம்போல் இந்த லிஸ்ட்டில் பாலிவுட் பிரபலங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... திருப்பதி சென்ற ரஜினிகாந்த்... தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு!!

33

கோலிவுட்டை பொறுத்தவரை இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளது நடிகர் விஜய் தான். அவர் இந்த லிஸ்ட்டில் 15-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 19-வது இடத்தில் இருந்த விஜய், இந்த ஆண்டு நான்கு இடங்கள் முன்னேறி உள்ளார். இந்த பட்டியலில் உலகம் முழுவதும் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை நடிகர் விஜய் பின்னுக்கு தள்ளி உள்ளார். தோனி 24-வது இடத்தில் உள்ளார்.

இதுதவிர கோலிவுட் பிரபலங்களான காஜல் அகர்வால் 13-வது இடத்திலும், சமந்தா 17-வது இடத்திலும், நயன்தாரா 33-வது இடத்திலும், சூர்யா 45-வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ் 62-வது இடத்திலும், ரஜினிகாந்த் 68-வது இடத்திலும், அஜித்குமார் 78-வது இடத்திலும், சாய் பல்லவி 89-வது இடத்திலும் உள்ளனர். பாலிவுட் பிரபலங்களான கத்ரீனா கைஃப், ஆலியா பட், சல்மான் சான், ஷாருக்கான் ஆகியோர் டாப் 10-ல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது எனக்கு மகிழ்ச்சி… நடிகர் விஷால் கருத்து!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Recommended image3
ரேவதிக்கு வந்த கனவு; அம்மாவால் கணவர் உயிருக்கு வந்த ஆபத்து: கார்த்திகை தீபம் அதிரடி திருப்பங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved