- Home
- Cinema
- OM Movie Day 3 Box Office : நெகடிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் தனுஷின் ஓம்... 3 நாட்களில் இத்தனை கோடியா?
OM Movie Day 3 Box Office : நெகடிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் தனுஷின் ஓம்... 3 நாட்களில் இத்தனை கோடியா?
OM Movie Box Office Collection : ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, மம்மூட்டி ஆகியோர் நடிப்பில் ரிலீஸ் ஆகி உள்ள ஓம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

OM Movie Day 3 Box Office
தனுஷ், மலையாள மெகாஸ்டார் மம்மூட்டி முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'ஓம்'. சாய் பல்லவி, ஸ்ரீலீலா போன்ற முன்னணி ஹீரோயின்கள் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 'அமரன்' படம் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் பேனரில் தனுஷ், ஷ்ரத்தா அகர்வால், அஸ்மத் ஜெகமக் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் கடந்த நவம்பர் 20ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
ஓம் படத்தின் கதை
ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் காடுகளில் செம்மரக் கடத்தல் நடக்கிறது. இந்த கடத்தலுக்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க் வேலை செய்கிறது. இதை ஒழிக்க ஆந்திரா மற்றும் தமிழ்நாடு போலீசார் இணைந்து ஒரு ஆபரேஷன் நடத்துகிறார்கள். இதில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரி பழனிவேல் (தனுஷ்) ரகசியமாக கடத்தல் கும்பலில் ஊடுருவுகிறார். கூலித் தொழிலாளியாக மாறுவேடத்தில் சென்று கும்பலின் நம்பிக்கையைப் பெறுகிறார். மறுபுறம், இந்த ஒட்டுமொத்த சட்டவிரோத வியாபாரத்தையும் பின்னணியில் இருந்து இயக்குபவர் பர்மா கார்த்திகேயன் (மம்மூட்டி).
கடப்பா மாவட்டத்தில் அவர் பெயர் சொன்னாலே அதிரும். அவரிடம் திரு என்ற பெயரில் பழனிவேல் வேலைக்கு சேருகிறார். ஆந்திராவில் சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை தாங்கும் ஐபிஎஸ் அதிகாரி நித்யா ரெட்டி (சாய் பல்லவி) இந்த ஆபரேஷனை வழிநடத்துகிறார். போலீசுக்கும் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடக்கும் போராட்டம், அப்துல் (நஸ்ருதீன் ஷா), சைதன்யாவின் பாத்திரங்கள் என்ன என்பதுதான் மீதிக்கதை.
கலவையான விமர்சனங்கள்
தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா போன்ற ஸ்டார்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தேர்ந்தெடுத்த கதைக்களம் சுவாரஸ்யமாக உள்ளது. செம்மரக் கடத்தலை வெறும் போலீஸ் vs கிரிமினல் கதையாக மட்டும் சொல்லாமல், அரசியல், நட்பு என எமோஷனலாக கொண்டு சென்றிருந்தார். ஆனால் இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது. கதை ஒரே இடத்திலேயே சுற்றுகிறது. கூலியாட்கள் என்கவுண்டர் எமோஷனலாக உள்ளது. அதைத்தொடர்ந்து வரும் ட்விஸ்ட்கள் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகவில்லை. கிளைமாக்ஸ் பெரிய அளவில் கவரவில்லை.
வசூல் நிலவரம்
விமர்சன ரீதியாக இப்படம் சொதப்பினாலும், வசூலில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இப்படம் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவில் 15.90 கோடி, ஓவர்சீஸில் 5 கோடி என 20.90 கோடி வசூலை வாரிசுருட்டி இருக்கிறது. இதுவரை உலகளவில் ரூ.85.30 கோடி வசூலித்துள்ளது இப்படம். நேற்றைய வசூலில் அதிகபட்சமாக தமிழ் வெர்ஷன் மட்டும் ரூ.11.55 கோடியும், தெலுங்கில் ரூ.3.80 கோடியும், இந்தியில் ரூ.55 லட்சமும் வசூலித்துள்ளது. இதுவரை இந்தியாவில் ரூ.58.30 கோடியும், வெளிநாடுகளில் ரூ.27 கோடியும் வசூலித்துள்ளது இப்படம். இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு தினங்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் செஞ்சுரி அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















