- Home
- Cinema
- Arjun Sarja: அந்த பயம் தான் என்னை ஃபிட்டா வெச்சிருக்கு: 64 வயசுலயும் யங்கா இருக்க சீக்ரெட் சொன்ன அர்ஜுன்
Arjun Sarja: அந்த பயம் தான் என்னை ஃபிட்டா வெச்சிருக்கு: 64 வயசுலயும் யங்கா இருக்க சீக்ரெட் சொன்ன அர்ஜுன்
Arjun Fitness Secret : ஆக்ஷன் கிங் அர்ஜுன் ரொம்ப ஃபிட்டா இருக்காரு. எக்சர்சைஸ், சின்ன வயசு பழக்கம், குடும்பம் மேல இருக்குற பொறுப்பு, அப்புறம் அந்த ஒரு பயம் தான் என்னை எப்பவும் ஃபிட்டா வெச்சிருக்குனு சொல்லியிருக்காரு.

அர்ஜுன் ஃபிட்னஸ் ரகசியம்
தமிழ் சினிமாவுல 'ஆக்ஷன் கிங்'னு பேர் வாங்குன அர்ஜுனுக்கு இப்போ 64 வயசு ஆகுது. ஆனா அவரோட உடம்ப பார்த்தா வயசு வெறும் நம்பர் தான்னு தோணும். இப்போ இருக்குற யங் ஹீரோக்களுக்கே டஃப் குடுக்குற மாதிரி ஆக்ஷன் சீன்ல நடிப்பாரு. இப்போ ரீசண்டா நடந்த ஒரு இன்டர்வியூல, அவரோட ஃபிட்னஸ் சீக்ரெட், டெய்லி எக்சர்சைஸ் பண்றது, அப்புறம் ஹெல்த்தியா இருக்க அவருக்கு என்ன இன்ஸ்பிரேஷன்னு மனசு விட்டு பேசியிருக்காரு.
அர்ஜுன் சொல்றபடி, நல்லா ஃபிட்டா இருக்க காசு, நிறைய டைம், இல்ல பெரிய ட்ரெய்னர் இருந்தா மட்டும் பத்தாது. அதுக்கு மெயினா தேவை நம்மளோட இன்ட்ரஸ்ட் அப்புறம் கான்ஃபிடன்ஸ் தான். இத பத்தி பேசும்போது ஒரு சாமிஜி சொன்ன விஷயத்த ஞாபகப்படுத்தினாரு. 'நீங்க ஒரு மணி நேரம் உங்க உடம்ப பாத்துக்கிட்டா, மீதி 23 மணி நேரம் அது உங்கள பாத்துக்கும்'னு அந்த சாமிஜி சொன்னது தன்னோட லைஃப்ல உண்மையாயிடுச்சுனு சொல்லியிருக்காரு.
ஃபிட்டா இருக்க காரணம் என்ன?
ஜிம்முக்கு போக புடிக்காத நாள்ல கூட, நம்மளே நம்மள மோட்டிவேட் பண்ணிக்கிட்டு போகணும்னு சொல்றாரு. காலையில எழுந்த உடனே எல்லார மாதிரியும் காபி குடிச்சிட்டு டிவி பாத்துட்டு உக்காந்துருக்கணும்னு தோணும். ஆனா ஹெல்த் முக்கியம்னு நெனச்சு இந்த ஆசைய கண்ட்ரோல் பண்ண கத்துக்கிட்டேன்னு அர்ஜுன் சொல்லியிருக்காரு.
ஜனங்க என்னை இன்னைக்கும் யங்கா, ஹெல்த்தியா பாக்க இது தான் காரணம்னு சொல்லியிருக்காரு. ஃபிட்னஸ்ங்குறது வெறும் ஆக்டரா வேலைக்கு மட்டும் இல்ல, குடும்பத்துக்காகவும் நம்ம சொந்த ஹெல்த்துக்காகவும் ரொம்ப முக்கியம். குடும்பத்துக்கு நம்ம தேவைப்படும்போது ஃபுல் எனர்ஜியோட அவங்க கூட இருக்கணும்ங்குற நெனப்பு தான் தனக்கு பெரிய மோட்டிவேஷன்னு சொல்லியிருக்காரு.
அப்புறம் ஆக்டர்களை ஃபிட்டா வெச்சிருக்க இன்னொரு காரணம் 'பயம்'னு அர்ஜுன் ஜாலியா சொல்லியிருக்காரு. நம்மள மக்கள் எப்படி பாப்பாங்களோங்குற பயம் தான் ஆக்டர்களுக்குள்ள ஒரு டிசிப்ளின கொண்டு வரும்னு சொல்றாரு. உதாரணத்துக்கு, நான் குண்டாயிட்டா மக்கள் பழைய படத்த நெனச்சு பாத்துட்டு, 'அப்போ எப்டி இருந்தாரு, இப்போ இப்படி ஆயிட்டாரே'னு நெனைக்கலாம். இந்த மாதிரி கமெண்ட் வரக் கூடாதுங்குற பயம் தான் என்னை எப்பவும் ஃபிட்டா வெச்சிருக்குனு சொல்லியிருக்காரு.
மணி கணக்கா ஒர்க் அவுட் பண்ணுவேன்
சின்ன வயசுலயே ஃபிட்னஸ்க்கு ஒரு ஸ்ட்ராங்கான பேஸ்மென்ட் போட்டுக்கிட்டதா அர்ஜுன் சொல்லியிருக்காரு. 'என்னோட பழைய போட்டோவ பாத்தா, நான் ஒரு மணி நேரம் இல்ல, மணி கணக்கா ஒர்க் அவுட் பண்ணுவேன்'னு சொல்லியிருக்காரு. ஃப்ரீ டைம் கிடைக்கும்போதெல்லாம் ஓடுறது, ஸ்போர்ட்ஸ், கராத்தே, குதிரை சவாரி, ஸ்விம்மிங், ஜிம்னாஸ்டிக்ஸ்னு நிறைய பண்ணியிருக்காராம்.
ஒரு பில்டிங்குக்கு பேஸ்மென்ட் எவ்ளோ முக்கியமோ, அதே மாதிரி உடம்புக்கும் சின்ன வயசுலயே இந்த மாதிரி ட்ரெய்னிங் கொடுத்து ஸ்ட்ராங் ஆக்குறது ரொம்ப முக்கியம்னு அட்வைஸ் பண்ணியிருக்காரு. ஆரம்பத்துலயே ஸ்ட்ரென்த் கொண்டு வந்தா, ஃபியூச்சர்ல கொஞ்சம் கேர்லெஸ்ஸா இருந்தாலும் உடம்பு அத தாங்கிக்கும். ஆனா எந்த காரணத்துக்காகவும் டிசிப்ளின விட்றக் கூடாதுனு சொல்லியிருக்காரு.
எக்சர்சைஸ்க்கு முக்கியத்துவம்
ஷூட்டிங் பிஸியா இருக்கும்போது எக்சர்சைஸ்க்கு எப்படி டைம் ஒதுக்குறீங்கனு கேட்டதுக்கு, 'முதல்ல எக்சர்சைஸ உங்க டைம் டேபிள்ல சேத்துக்கோங்க. அப்புறம் மத்த வேலைகள் தானா செட் ஆயிடும்'னு அர்ஜுன் சொல்லியிருக்காரு. காலையில சாப்பாட்டுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்குறோமோ, அதே மாதிரி எக்சர்சைஸ்க்கும் முக்கியத்துவம் கொடுத்து டெய்லி அதுக்குனு டைம் ஒதுக்கறது நல்லதுனு சொல்லியிருக்காரு.
64 வயசுலயும் அர்ஜுன் ஃபிட்டா இருக்குறதுக்கு பின்னாடி எந்த மேஜிக்கும் இல்ல; சின்ன வயசுல இருந்தே வந்த எக்சர்சைஸ் பழக்கம், டிசிப்ளின், கான்ஃபிடன்ஸ் அப்புறம் குடும்பம் மேல இருக்குற பொறுப்பு தான் காரணம். அதுகூட மக்கள் என்ன சொல்வாங்களோங்குற பயமும் தான் அவர ஃபிட்டா இருக்க வைக்குதுனு அவர் சொன்னது இப்போ வைரல் ஆயிட்டு இருக்கு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















