Arjun : அசுரன் vs ஆக்ஷன் கிங்; அஜித்தை தொடர்ந்து தனுஷுக்கு வில்லனாகும் அர்ஜுன்!
தளபதி விஜய், நடிகர் அஜித் ஆகியோருக்கு வில்லனாக நடித்த அர்ஜுன், அடுத்ததாக தனுஷுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம்.

தனுஷ் கைவசம் உள்ள படங்கள்
தமிழ் திரையுலகில் செம பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷனில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். அவர் நடிப்பில் தற்போது இந்தியில் ராஞ்சனா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் உள்ள கல்லூரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷின் அடுத்த படம்
அப்படத்தை முடித்த கையோடு, தமிழில் அவர் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்தின் ரிலீஸ் பணிகள் தொடங்க உள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் தனுஷ் உடன் அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இதுதவிர தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம், லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக் என லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இதையும் படியுங்கள்... சிம்புவுக்கு நோ சொல்லிவிட்டு; தனுஷுக்கு ஓகே சொன்ன அனிருத்!
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ்
இதில் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் தான் அடுத்ததாக நடிக்க உள்ளார் தனுஷ். இப்படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தனுஷுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கான தேர்வு முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம். அதன்படி தற்போது இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தனுஷுக்கு வில்லனாக அர்ஜுன்
அதன்படி ஆக்ஷன் கிங் அர்ஜுன் தான் விக்னேஷ் ராஜா இயக்க உள்ள படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த அர்ஜுன், அடுத்ததாக அண்மையில் வெளியான விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்த இரண்டு பெரிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தனுஷுக்கு வில்லனாக நடிக்க கமிட்டாகி உள்ளார் அர்ஜுன். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! கதைக்களம் குறித்து வெளியான தகவல்!