சிம்புவுக்கு நோ சொல்லிவிட்டு; தனுஷுக்கு ஓகே சொன்ன அனிருத்!
தமிழ் திரையுலகில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், நடிகர் தனுஷ் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரது இசையில் தற்போது ரஜினிகாந்தின் கூலி, சிவகார்த்திகேயனின் எஸ்.கே.23, தளபதி விஜய்யின் ஜனநாயகன், விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இது மட்டுமின்றி தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம், இந்தியில் ஷாருக்கான் அடுத்ததாக நடித்து வரும் கிங் ஆகிய படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.
சிம்புவுக்கு நோ சொன்ன அனிருத்
பான் இந்தியா அளவில் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவருடன் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. இருவரும் எஸ்.டி.ஆர் 49 படத்துக்காக இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அனிருத் மற்ற படங்களில் பிசியானதால் அப்படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டாராம். இதனால் அவருக்கு பதில் அப்படத்திற்கு இசையமைக்க சாய் அபயங்கர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... STR 49 படத்துக்காக குட்டி அனிருத் உடன் கூட்டணி அமைக்கும் சிம்பு!
டி56 இசையமைப்பாளர் அனிருத்
சிம்பு படத்திற்கு இசையமைக்க மறுத்த அனிருத், தற்போது தனுஷ் உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். தனுஷின் 56-வது படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்தை இயக்க உள்ள டைரக்டர் யார் என்கிற தகவல் சீக்ரெட்டாக உள்ள நிலையில், அதில் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4வது முறையாக இணையும் தனுஷ் - அனிருத் கூட்டணி
அனிருத்தை தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதே தனுஷ் தான். அவர் நடிப்பில் வெளிவந்த 3 படம் மூலம் அறிமுகமான அனிருத், அதன்பின்னர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி, தங்கமன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இதையடுத்து கடைசியாக இருவரும் திருச்சிற்றம்பலம் படத்திற்காக இணைந்து பணியாற்றி இருந்தனர். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஐந்தாவது முறையாக இருவரும் கூட்டணி அமைக்க உள்ளனர்.
இதையும் படியுங்கள்... 'விடாமுயற்சி' பார்க்கச் சென்ற அனிருத்துக்கு ரூ.1000 அபராதம்! நடந்தது என்ன?