வாரிசை மிஞ்சிய துணிவு..! இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்து வெளியான தகவல்!
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' ஆகிய இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள, திரைப்படம் 'வாரிசு'. குடும்ப சென்டிமென்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.
அதே போல் இயக்குனர் எச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில், அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள, 'துணிவு' திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பல வருடங்களுக்கு பின் அஜித் மற்றும் விஜய் ஆகிய இரு பிரபலங்களின் படங்களும் ஒரே பண்டிகை தினத்தை முன்னிட்டு நேரடியாக மோதிக்கொள்ள உள்ள நிலையில், இந்த இரு படத்தின் புரோமோஷன் பணிகளும் படு தீவிரமாக நடந்து வருகிறது.
Thunivu and Varisu
இதுவரை விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து வெளியாகியுள்ள ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி லிரிக்கல் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல் அஜித்தின் துணிவு படத்தில் இருந்து வெளியான, 'சில்லா சில்லா' பாடலுக்கும் மாஸ் வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருந்தனர். விரைவில் இரண்டாவது சிங்கிள் பாடலான 'காசே தான் கடவுளடா' பாடல் வெளியாக உள்ளதை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இது ஒரு புறம் இருக்க, இந்த இரு படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, அஜித்தின் துணிவு திரைப்படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் என்றும் விஜய்யின் வாரிசு திரைப்படம் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் ஓடும் என தகவல் வெளியாகியுள்ளது.