ஃபாரில் ஸ்டைலில் நடந்த திருமண பார்ட்டி! வெள்ளை நிற உடையில் ஒற்றை டைமென்ட் நெக்லஸ் அழகில் ஜொலிக்கும் ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா ஃபாரில் ஸ்டைலில் குடும்பத்துடன் கொண்டாடிய திருமண பார்ட்டி குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவ்வப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக... திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது... ஹன்சிகா திருமணத்தை முன்னிட்டு குடும்பத்தினருக்கு ஃபாரின் ஸ்டைலில்... வெள்ளை நிற மாடர்ன் உடையில் கெட் டூ கெதர் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.
இதில் ஹன்சிகாவின் மிக நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அந்த பார்ட்டியின் போது, எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது இவர் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
இந்த பார்ட்டியின் போது ஹன்சிகா வெள்ளை நிற மாடர்ன் உடையில்... கழுத்தில் ஒற்றை வைர நெக்லஸ் ஒன்றையும் அணிந்துள்ளார். இந்த புகைப்படங்களை ஹன்சிகா தற்போது வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஹன்சிகா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறியுள்ள நிலையில், விரைவில் இவர் நடிக்க உள்ள படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.