Asianet News TamilAsianet News Tamil

Year Ender 2022: 2022ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தின் திருப்பு முனைத் தீர்ப்புகள்

2022ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஏராளமான திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய, அரசியலில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய, புதிய சட்டங்களை உருவாக்கும் சூழலைஉருவாக்கக் கூடிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. 

 

Year Ender 2022: very Important Supreme Court milestone Judgments of 2022
Author
First Published Dec 21, 2022, 10:18 PM IST

2022ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஏராளமான திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய, அரசியலில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய, புதிய சட்டங்களை உருவாக்கும் சூழலைஉருவாக்கக் கூடிய தீர்ப்புகளை வழங்கியுள்ளது. 

அந்த தீர்ப்புகள் சமூகத்தில், தனிமனிதர்கள் வாழ்வில், பல்வேறு துறைகளில் மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளன. இழந்த உரிமைகளை பெற்றுத்தர அந்த தீர்ப்புகள் துணைபுரிந்துள்ளன, மறைக்கப்பட்ட மறைந்துகிடக்கும் உரிமைகளை, நியாயங்களை வெளிக்கொண்டுவர அந்த தீர்ப்புகள் உதவியுள்ளன. 

அந்த தீர்ப்புகளை தொகுத்து சுருக்கமாக இந்த ஆண்டு இறுதித் தீர்ப்புகளில் வழங்கியுள்ளோம். 


2022ம் ஆண்டின் மறக்க முடியாத உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புகள்


1.    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தனர். பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து தங்களையும் விடுதலைச் செய்யக்கோரி 6 பேரும் தாக்கல் செய்த மனுவை ஏற்று விடுதலை செய்ய நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

Year Ender 2022: very Important Supreme Court milestone Judgments of 2022

2.    பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 8ம் தேதி தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித், நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பார்வதிவாலா, ரவிந்திரபட், பேலா திரிவேதி ஆகியோர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

Year Ender 2022: 2022 ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயணித்த டாப் 5 இடங்கள் ஒரு பார்வை!!

3.    பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பலாத்காரம் செய்யப்பட்டாரா என்பதை உறுதி செய்யும் இருவிரல் பரிசோதனைக்கு தடை விதி்த்து உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 1ம் தேதி தீர்ப்பளித்தது

4.    கர்நாடக மாநிலம், உடுப்பி நகரில் கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர கர்நாடக அரசு தடைவிதித்தது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். உயர் நீதிமன்றமும், கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தேவையில்லை எனத் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஹேமந்த் குப்தா, மேல்முறையீட்டு மனுக்கள தள்ளுபடிச செய்து உத்தரவிட்டார். நீதிபதி சுதான்சு துலியா, கர்நாடக அரசின் ஆணையை ரத்து செய்து, தலைமை நீதிபதி அமர்வுக்கு கடந்த அக்டோபர் 13ம்தேதி பரிந்துரைத்தார்.

Year Ender 2022: very Important Supreme Court milestone Judgments of 2022

5.    கடந்த செப்டம்பர் 27ம் தேதி உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு வழக்கின் விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யும் திட்டம் தொடங்கியது. முதல்வழக்காக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10சதவீத இடஒதுக்கீடு வழக்கு விசாரிக்கப்பட்டது.

இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் பிரியாணி முதலிடம்… ஸ்விகி நிறுவனம் தகவல்!!

6.    கேரளாவில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கூறி தொடர்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 12ம்தேதி தீர்ப்பளித்தது.அதில் தெருநாய்களுக்குத் தொடர்ந்து யார் உணவு வழங்குகிறார்களோ அவர்கள்தான் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும் பொறுப்பேற்க வேண்டும். அந்த நாய்கள் மனிதர்களைக் கடித்தால் அதற்குரிய மருத்துவச் செலவையும் நாய்க்கு உணவு வழங்குவோர்தான் ஏற்க வேண்டும் என நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் ஜே.கே.மகேஸ்வரி தீர்ப்பளித்தனர்

7.    தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை தடை செய்யக் கோரி பாஜகவழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயே தாக்கல் செய்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் “ இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. இலவசங்கள் வழங்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை செய்வது ஜனநாயகவிரோதம்” என்று தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா தெரிவித்தார்

Year Ender 2022: very Important Supreme Court milestone Judgments of 2022

8.    சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் ஒருவரை கைது செய்ய அமலாக்கப்பிரிவுக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வு கடந்த ஜூலை 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

9.    திருமணமாகாத பெண்ணின் 24வார கருவைக் கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஜூலை 22ம் தேதி தீர்ப்பளி்த்தது.

10.    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, ஜூலை11ம்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கொரோனாவை விட ஆபத்தானது கொரோனா மாறுபாடான XBB வைரஸ்… அறிகுறிகள் என்ன? பாதுகாத்துக்கொள்வது எப்படி?

11.    பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது. விருப்பத்துடன்ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராகத் தலையிடவோ போலீஸார் நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கடந்த மே 26ம்தேதி தீர்ப்பளித்தது.

Year Ender 2022: very Important Supreme Court milestone Judgments of 2022

12.    ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளைக் கட்டுபடுத்தாது என்று மே 20ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளி்த்தது

13.    ராஜீவ் காந்தி கொலைவழக்கில்குற்றவாளியான பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்தார். தன்னை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரரறிவாளனை விடுதலை செய்து மே 18ம் தேதி தீர்ப்பளித்தது

Year Ender 2022: very Important Supreme Court milestone Judgments of 2022

14.    தேசத் துரோக சட்டத்தை மத்திய அ ரசு பரிசீலனை செய்யும்வரை ஐபிசி 124பிரிவின் கீழ் யார்மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று மே 11ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

Follow Us:
Download App:
  • android
  • ios