Year Ender 2022: இதை மட்டும் நம்பாதிங்க! 2022ம் ஆண்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய ‘12 போலிச் செய்திகள்’
உண்மை நடந்து வரும், பொய் பறந்து வரும் என்பார்கள். அதேபோல உண்மையான செய்திகளைவிட பொய் செய்திகள், போலிச் செய்திகள் பரவும் வேகம், படிக்கும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். ஆனால், உண்மைச் செய்திகளை நம்புகிறவர்களைவிட, போலிச் செய்திகளை நம்பி பல்வேறு சிக்கல்களை சிக்கி பிரச்சினைகளை அனுபவிப்பவர்களே அதிகம்.
உண்மை நடந்து வரும், பொய் பறந்து வரும் என்பார்கள். அதேபோல உண்மையான செய்திகளைவிட பொய் செய்திகள், போலிச் செய்திகள் பரவும் வேகம், படிக்கும் ஆர்வமும் அதிகமாக இருக்கும். ஆனால், உண்மைச் செய்திகளை நம்புகிறவர்களைவிட, போலிச் செய்திகளை நம்பி பல்வேறு சிக்கல்களை சிக்கி பிரச்சினைகளை அனுபவிப்பவர்களே அதிகம்.
உண்மைச் செய்திகள் விளைந்த நல்ல பலன்களைவிட, பொய் மற்றும் போலிச் செய்திகளால் விளைந்த பாதிப்புகள்தான் அதிகம். உண்மைத் தகவல்களை போலிச் செய்திகள் திரைபோட்டு மறைத்து விடுகின்றன. அந்த திரைகளை நாம் களைந்து அதன் உண்மையை வெளிக்கொணர வேண்டியுள்ளது.
Covid 19 India: கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை! அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
அந்த வகையில் 2022ம் ஆண்டில் 12 முக்கியச் செய்திகள் சமூகத்தில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தின. அந்த செய்திகளை அவ்வப்போது மத்தியஅ ரசின் பிஐபி நிறுவனம் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அது குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம்.
1. இந்திய ராணுவத்தில் இருந்து சீக்கியர்களை நீக்குவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கான அமைச்சரவை கலந்து ஆலோசித்தது போன்ற புகைப்படம் வைரலானது. இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து அது பொய் என பிஐபி செய்தி வெளியிட்டது.
2. நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் பிரதான் மந்திரி கன்யா ஆயுஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரத்தை மத்திய அரசு வழங்குகிறது என்று செய்தி வெளியானது. ஆனால், மத்திய அரசு சார்பில் பிரதான் மந்திரி கன்யா ஆயுஷ் என்ற திட்டமே கிடையாது. இதுபோன்ற திட்டத்தை யாரும் நம்ப வேண்டாம், பரப்ப வேண்டாம் என்று பிஐபி ஆய்வு செய்து வெளியி்ட்டது
ஏன் எங்களுக்கு மட்டும்?பாஜக பேரணி நடத்துவது தெரியலையா? மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ் கேள்வி
3. வங்கிகளில் ரூ.10 ஆயிரம் அளவு பணம் வைத்திருந்தால் உடனடியாக எடுத்துவிடவும். பொருளாதார நெருக்கடி காரணமாக அந்தப் பணத்தை முடக்கிவிட மத்தியஅ ரசு திட்டமிட்டுள்ளதாக ட்விட்டரில் தகவல் வைரலாகியது. இதுகுறித்து பிஐபி ஆய்வு செய்து அந்தத் தகவல் பொய்யானது எனத் தெரிவித்தது
4. அரியலூர் மாணவி லாவண்யா மரணத்துக்கு மதமாற்றம் காரணம் இல்லை.மாணவியின் பெற்றோர், காப்பாளருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்ததாக பிரபல சேனலில் ட்விட்டரில் செய்தி வைரலானது. இந்த செய்தியை ஆய்வு செய்த பிஐபி இந்த ட்விட்டர் பதிவு தவறானது. தேசிய குழந்தைகள் நலஆணையம் எந்த விதமான ஆலோசனையும் வழங்கவில்லை எனத் தெரிவித்தது
டெல்லியில் ரயிலை எண்ணும் வேலையாம்! தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரூ.2.60 கோடி மோசடி
5. நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய அரசு இலவசமாக லேப்டாப் வழங்க உள்ளதாக செய்தியும், ஒரு இணையதள லிங்கும் தரப்பட்டது. அதில் பதிவு செய்வோருக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்கிற செய்தி வைரலானது. இந்த செய்தியை ஆய்வு செய்த பிஐபி இந்த செய்தி பொய்யானது, இது போன்ற திட்டம் மத்திய அரசிடம் ஏதும் இல்லை எனத் தெரிவித்தது.
6. வாடகை வீடு, கடைகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை மத்திய நிதிஅமைச்சகம் அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல் வைரலானது. ஆனால், இந்தத் தகவலை ஆய்வு செய்த பிஐபி நிறுவனம்,இதுபோன்ற எந்த முடிவையும் ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கவில்லை, இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என விளக்கம் அளித்தது.
7. பேட்டரி ஸ்கூட்டர்கள், பேட்டரியில் ஓடும் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தக் கோரி மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவல் பொய்யானது என பிஐபி தெரிவித்தது.
8. டாலர் மதிப்பு உயர்வு, ரூபாய் மிதிப்புக் குறைவு குறித்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசுவது போன்ற புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது. அதாவது, நிர்மலா சீதாராமன் “ என்னுடைய குடும்பம் மளிகை பொருட்கள் உள்ளிட்ட பலபொருட்களை இந்திய ரூபாயில் வாங்குகிறார்கள்.அமெரிக்க டாலரில் வாங்குவதில்லை. அப்படியிருக்கும்போது அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு குறைவு பற்றி ஏன் கவலைப்படவேண்டும்” எனத் தெ ரிவித்ததாக செய்தி வெளியானது. ஆனால், இதுபோன்று நிர்மலா சீதாராமன் பேசவி்ல்லை இது போலியாக சித்தரிக்கப்பட்டது என பிஐபி கண்டுபிடித்து விளக்கம் அளித்தது.
9. இந்திய ரூபாய் நோட்டில் ரவிந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோர் படத்தை அச்சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இது போலியான தகவல், இதுபோன்ற எந்த முடிவும் ஆர்பிஐ எடுக்கவில்லை என்பதை பிஐபி உறுதி செய்தது.
10. வேகமாக வளர்ந்து வரும நாடுகள் பட்டியலி்ல் இந்தியா 2021ம் ஆண்டில் 164வது இடத்துக்கு சென்றுவிட்டது.2011ம் ஆண்டில் 3வது இடத்தில் இந்தியா இருந்தது என்று தகவல் வெளியானது ஆனால் இது பொய்யானது, அவ்வாறு எந்த அறிக்கையும், புள்ளிவிவரங்களும் வெளியாகவில்லை என்று பிஐபி உறுதி செய்தது.
11. ஆதார் கார்டு வைத்திருப்போர் அனைவருக்கும், ரூ.4.78 லட்சம் கடனாக மத்திய அரசு வழங்க உள்ளது என்று தகவல் வெளியானது. இதை ஆய்வுசெய்த பிஐபி இதுபோன்ற எந்த அறிவிப்பையும் மத்தியஅரசு வெளியிடவில்லை, இதுபோன்ற திட்டமும் இல்லை. இந்தத் தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம், தனிப்பட்ட விவரங்களை யாரும் பகிர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டது.
12. சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தை மத்திய அரசு நீக்க உள்ளதாக தகவல் பிரபல ஆங்கில நாளேடான டெக்கான் ஹெரால்டில் வெளியானது. ஆனால் இதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்த பிஐபி நிறுவனம் அதுபோன்ற தகவல்ஏதும் இல்லை என பிஐபி தெரிவித்தது