MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2022 எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக தோல்வியடைந்த திரைப்படங்கள்!

2022 எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படு மோசமாக தோல்வியடைந்த திரைப்படங்கள்!

2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி, விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை தராத படங்கள் குறித்த ஒரு பார்வை  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 20 2022, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கதில், தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், 237.05 வசூல் செய்து, வெற்றிப்படம் என பெயர் எடுத்த போதிலும், விமர்சனம் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது.  அதே போல் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது.

27

வீரமே வாகைசூடும்:

நடிகர் விஷால், இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம்...விஷாலின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுமார் 18 கோடி பட்ஜெட்டில் வெளியானத்து. ஆனால் 9 கோடி மட்டுமே இந்த படம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியை சந்தித்தது.

மஞ்சள் நிற லோ நெக் சல்வாரில்... அதிரி புதிரி கவர்ச்சி..! அடங்காமல் அட்டகாசம் செய்யும் அமலா பால் போட்டோஸ்..!
 

37
Image: Official film poster

Image: Official film poster

ராக்கெட்டெரி:

நடிகர் மாதவன் நடித்து, எழுதி, இயக்கிய திரைப்படம் Rocketry: The Nambi Effect. இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரான ஒரு இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். இந்த திரைப்படம் சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், 40 முதல் 45 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

47

தி லெஜெண்ட்:

சரவணா ஸ்டார் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த திரைப்படம் 'தி லெஜெண்ட்'. இரட்டை இயக்குனர்களான ஜெடி மற்றும் ஜெரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 16 முதல் 18 கோடி வரை மட்டுமே வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியை சந்தித்தது.

பொங்கலுக்கு 'வாரிசு' படத்துடன் 'துணிவு' மோதுவது குறித்து விஜய் சொன்னது என்ன ? பிரபல நடிகர் கூறிய தகவல்!

57

லைகர்:

இயக்குனர் பூரி ஜெகன் நாதன் இயக்கத்தில், கரண் ஜோகர், சார்மி, மற்றும் இயக்குனர் பூரி ஜெகன் நாதன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்திருந்த திரைப்படம் லைகர். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா பாக்ஸராக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்... சுமார் 90 முதல் 110 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், வெறும் 60 கோடி மட்டுமே வசூல் செய்து, படு தோல்வியை சந்தித்தது.

67

கோப்ரா:

நடிகர் விக்ரமை வைத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய மிக பிரமாண்டமான திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தை எஸ்.எஸ்.லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் மிரட்டிய இந்த படம் 40 கோடி மட்டுமே வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸிலும், விமர்சன ரீதியாகவும் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி! அய்யோ வேண்டாம் பதறிய சிலர்? தங்கலான் படப்பிடிப்பில் விக்ரம் செய்த சேட்டை!

77

பிரின்ஸ்:

தொடர்ந்து தரமான படங்களையும், வித்தியாசமான படங்களையும் கொடுக்க விரும்பும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம், சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், 35 முதல் 40 கோடி வரை வசூலித்து படு தோல்வியை சந்தித்தது. காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று கூறப்பட்டாலும், பல இடங்களில் காமெடி என்கிற பெயரில் சிரிப்பே வராமல் காமெடி செய்து, ரசிகர்களை படுப்பாக்கினார் இயக்குனர் என, பல நெகடிவ் கமெண்ட்ஸ் வெளியானதே... இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது குறிபிடித்தக்கது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் எதாவது பண்ணிப்பேன் - காதல் கணவரால் கண்ணீர் விட்டு கதறிய விஜய் டிவி சீரியல் ஹீரோயின்!
Recommended image2
Vijay Deverakonda: விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா;என்ன நடந்தது?
Recommended image3
Youth Ken Karunas: 'முட்ட கலக்கி' பாடலின் அசுர சாதனை! திரையுலகை அதிரவைத்த 'யூத்'! கென் கருணாஸின் விஸ்வரூப வெற்றி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved