மஞ்சள் நிற லோ நெக் சல்வாரில்... அதிரி புதிரி கவர்ச்சி..! அடங்காமல் அட்டகாசம் செய்யும் அமலா பால் போட்டோஸ்..!
நடிகை அமலா பால் மஞ்சள் நிற சல்வாரில்... கவர்ச்சிக்கு குறைவில்லாமல் அட்டகாசம் செய்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில், விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அமலா பால், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், முயற்சியை கைவிடாமல் தீவிர பட வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், ரசிகர்கள் கண்களுக்கு அடிக்கடி கவர்ச்சி விருந்து வைத்து வரும் இவர்... தற்போது மஞ்சள் நிற ஸ்லீவ் லெஸ் சல்வாரில்... லோ நெக் வைத்து அவுட் பிட்டில் கலக்கும் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை கண் கொட்டாமல் ரசிப்பதற்கு என்றே இவருடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சுமார் 4 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.
அந்த வகையில் வழக்கம் போல் இவருடைய மஞ்சள் நிற... கவர்ச்சிகரமான அவுட் பிட்டை பார்த்து ஆஹா... ஓஹோ என வர்ணித்து வருவது மட்டும் இன்றி, லைக்குகளையும் தாறுமாறாக குவித்து வருகிறார்கள்.
இவர் வெளியிடும் இந்த புகைப்படங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கிறதோ... இல்லையோ... லைக்குகள் மட்டும் ரசிகர்கள் மட்டும் அதிகரித்து கொண்டே செல்கின்றனர்.
அமலா பால் கடைசியாக தமிழில் நடித்து தயாரித்திருந்த 'கடவார்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது விரைவில் 'அதோ அந்த பறவை போல’ என்ற படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ஹிந்தி மலையாள போன்ற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.