இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, டெக் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:58 PM (IST) Jul 20
08:30 PM (IST) Jul 20
லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அட்லாண்டாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீப்பிடித்தது. விமானி சமயோசிதமாகச் செயல்பட்டு விமானத்தை லாஸ் ஏஞ்சல்ஸிலேயே பத்திரமாகத் தரையிறக்கினார். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
08:00 PM (IST) Jul 20
Ajith Kumar Met an Car Accident at Italy GT4 Car Race : நடிகர் அஜித் குமாரின் கார் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
07:44 PM (IST) Jul 20
நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி என்றும், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புத்திசாலி என்றும் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார். விஜய் அரசியலில் ஜெயிப்பது கஷ்டம், அண்ணாமலை நன்றாக வருவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
07:05 PM (IST) Jul 20
தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். டி.எஸ்.பி. சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
06:55 PM (IST) Jul 20
Aramm Movie Director Gopi Nainar : அறம் படத்தின் இயக்குநரான கோபி நயினார் மீது உதவி இயக்குநர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
06:24 PM (IST) Jul 20
திருச்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து முனையம், அதிநவீன வசதிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சூழலுடன் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
05:42 PM (IST) Jul 20
யூகலிப்டஸ் எண்ணெய் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
05:41 PM (IST) Jul 20
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெறும் மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
05:20 PM (IST) Jul 20
இந்திய அணி வீரர் ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டதால் அவர் 4வது டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
05:13 PM (IST) Jul 20
Ravi Mohan and Kenisha Francis Meet Vijitha Herath : கெனிஷா உடன் ரவி மோகன் இலங்கை சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
05:01 PM (IST) Jul 20
சில பெண்களுக்கு கருப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் ஏற்படுகின்றன. இந்த கட்டிகள் ஏன் உருவாகின்றன? இதன் அறிகுறிகள் என்ன? சிகிச்சை முறைகள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
04:48 PM (IST) Jul 20
இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, லாஸ் வேகாஸ் ஃப்ரீஸ்டைல் சதுரங்கப் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தியுள்ளார். இது கடந்த மூன்று நாட்களில் கார்ல்சனுக்கு எதிரான பிரக்ஞானந்தாவின் இரண்டாவது வெற்றியாகும்.
04:22 PM (IST) Jul 20
04:06 PM (IST) Jul 20
மு.க.முத்துவை தந்தை கருணாநிதியே கைது செய்தார் என்று அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
03:54 PM (IST) Jul 20
சில உணவுகளை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அதன் ஊட்டச்சத்துக் குறைவதுடன், சில சமயங்களில் பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவித்து உணவு விஷமாக மாறலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
03:35 PM (IST) Jul 20
03:23 PM (IST) Jul 20
N Anand Who Took Saliva Leaf For Thalapathy Viay in Tamil : விஜய் என்ற 3 எழுத்து மந்திரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த எச்சில் இலையை எடுத்து தான் ஒரு அடிமட்ட தொண்டன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.
03:03 PM (IST) Jul 20
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கியதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் முறையே 5.0, 6.7 மற்றும் 7.4 ஆக பதிவாகியுள்ளன.
02:40 PM (IST) Jul 20
திமுகவின் இளைஞர் அணி இன்று 46-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
02:14 PM (IST) Jul 20
அதிமுகவுக்கு ஓட்டுப்போட்ட நாங்கள் ஏமாளிகள் அல்ல என பாஜகவினர் தெரிவித்துள்ளதால் அதிமுக, பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.
01:49 PM (IST) Jul 20
கிராண்ட் கேன்யனில் சுமார் 56,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு பெரிய நிலச்சரிவு, வடக்கு அரிசோனாவில் ஒரு விண்கல் தாக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
01:35 PM (IST) Jul 20
ஜோதிட சாஸ்திரத்தின் படி கேந்திர திரிகோண யோகம் என்பது மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
01:28 PM (IST) Jul 20
பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு கட்சியில் பிளவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
12:55 PM (IST) Jul 20
August Matha 2025 Rasi Palan : ஆகஸ்ட் கிரகப் பெயர்ச்சி 2025: ஆகஸ்ட் மாதத்தில் பல ராஜயோகங்களை உருவாக்கும் கிரகப் பெயர்ச்சிகள் நிகழ உள்ளன. இந்த மாற்றம் 5 ராசிக்காரர்களை அதிர்ஷ்டசாலிகளாக்கும். ஆகஸ்ட் மாத அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
12:44 PM (IST) Jul 20
12:21 PM (IST) Jul 20
ஒற்றைத் தலைவலியை தூண்டக்கூடிய உணவுகள் குறித்தும், அதன் பின்னால் உள்ள மருத்துவ காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
12:18 PM (IST) Jul 20
டெல்லியில் உள்ள பல தபால் நிலையங்கள் ஜூலை 21, 2025 அன்று APT 2.0 மென்பொருள் மேம்படுத்தலுக்காக ஒரு நாள் மூடப்படும். இந்த மேம்படுத்தல் விரைவான சேவைகள், பயனர் நட்பு இடைமுகம் மற்றும் அதிகரித்த நம்பகத்தன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12:15 PM (IST) Jul 20
எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக பாஜகவை நேரடியாக விமர்சித்துள்ளார். ஆட்சியில் பங்கு கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
11:45 AM (IST) Jul 20
தனது மகளின் இந்த நிலைமைக்கு காரணமான சுகன்யாவின் கன்னத்தில் பளார் பளாருன்னு 15 முறை அறைந்து கோமதி தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அவர் மீது காட்டியுள்ளார்.
11:21 AM (IST) Jul 20
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த கிருத்திகை தினத்தில் எப்படி வழிபட வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
11:15 AM (IST) Jul 20
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனைக்குள் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிகாலையிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.
10:58 AM (IST) Jul 20
S J Suryah not Married Yet Reason Behind His Single Life : தனது லட்சித்திற்காக 50 வயதை கடந்தும் கூட இப்போது வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நடிகரும், இயக்குநருமான எஸ் ஜே சூர்யா இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
10:18 AM (IST) Jul 20
கடவுள் புகைப்படங்களுக்கு பின்னால் பல்லிகள் ஊர்ந்து செல்வதை கவனத்திருப்போம். ஆனால் இது நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
10:14 AM (IST) Jul 20
கடந்த ஆண்டு பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் விதிவிலக்கான செயல்திறனைக் கண்டுள்ளன. குறிப்பாக லார்ஜ், மிட்கேப் மற்றும் ஸ்மால்-கேப் பிரிவுகளில். மோதிலால் ஓஸ்வால் லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்ட் 58.6% வருடாந்திர வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது.
10:08 AM (IST) Jul 20
வைகோ தான் மிகப்பெரும் துரோகி என்றும் மதிமுக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
08:42 AM (IST) Jul 20
திமுகவை தாக்கி பேசினாலும் காமராஜருக்கு ஏசி அமைத்து கொடுத்ததாக கருணாநிதி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
08:29 AM (IST) Jul 20
இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் ரெப்போ விகிதத்தைக் குறைக்கக்கூடும், இது கடன் வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். இது வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் கார் கடன்களை மிகவும் மலிவு விலையில் மாற்றும்.
07:58 AM (IST) Jul 20
மாருதி சுஸுகி அதன் பிரபலமான ஹேட்ச்பேக் வேகன்ஆரில் ரூ.1.05 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜூலை 31, 2025 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் கிடைக்கும்.
07:27 AM (IST) Jul 20
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மறைவுக்குப் பின், அவரது வீட்டுப் பணிப்பெண் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.